தெற்கின் குரல் மட்டுமல்ல!
மார்ச் 22 அன்று சென்னையில் தமிழக முதல்வர் நடத்திய பிரம்மாண்டமான கூட்டம், பல மாநிலங்களின் தலைவர்களை - நான்கு முதலமைச்சர்கள் உட்பட - நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு செயல் குழுவின் (JAC) தொடக்க கூட்டத்திற்காக ஒன்றிணைத்து, தெளிவான செய்தியை விடுத்துள்ளது: ‘‘தற்போ தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்ப டையில் மட்டுமே எல்லை மறுவரையறை செய் வது ஏற்றுக்கொள்ள முடியாதது”.
கூட்டத்தின் முதன்மை கோரிக்கை - 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கச் செய்வத - இது, தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த கட்சிக ளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தை பின்பற்றுகிறது, அதில் 30 ஆண்டு நீட்டிப்பு முன்மொழியப்பட்டது. இந்த கருத்து புதிதல்ல; இது அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தின் மூலம் (2000 வரை) செயல்படுத்தப்பட்டு, 84வது திருத்தத்தின் மூலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது (2026 வரை).
நியாயமாகவே, குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் குறைக்கப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவத் தால் தண்டிக்கப்படக்கூடாது என்று கூட்டு செயல் குழு வலியுறுத்தியது. கூட்டத்தில் வலுவான தென் மாநில பங்கேற்பு இருந்தபோதிலும் ஒரு பிராந்திய பிரச்சனையாக நிராகரிக்கப்படக்கூடாது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார், கேரள முதல மைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல மைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெற்கிற்கு வெளியேயும் பங்கேற்பு இருந்தது, பஞ்சாப் முதலமைச்சர் பக வந்த் மான் மற்றும் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் பங்கேற்ற னர். அவர்கள் திறமையான மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாநிலங்க ளை தண்டிப்பதற்கு எதிரான செய்தியை வலுப் படுத்தினர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, பல்வேறு பிராந்தி யங்கள் மற்றும் கருத்து நிலைகளைச் சேர்ந்த கட்சி கள் ஒரு உறுதியான விஷயத்தில் ஒன்றிணைந் துள்ளன.
பாரத ராஷ்டிர சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், தொகுதி மறுவரையறை செயல் முறையில் ஒரு அளவுகோலாக ஒரு மாநிலத்தின் நிதிப் பங்களிப்பை பரிசீலிக்க முன்மொழிந்தார் - இந்த யோசனை தெற்கு மாநிலங்களின் கவலை களை நிவர்த்தி செய்ய உதவலாம். ஆனால் ஒரு ஆண்டிலிருந்து மற்றொரு ஆண்டிற்கு மாறும் காரணிகளின் அடிப்படையில் தொகுதி மறுவரை யறை போன்ற நீண்ட கால விளைவுகளைக் கொண்ட முடிவுகளை எடுப்பது அர்த்தமற்றதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஒன்றிய அரசாங்கம் தாமதமின்றி பரந்த அளவிலான கட்சி களை உள்ளடக்கிய தேசிய அளவிலான ஆலோசனைகளைத் தொடங்க வேண்டும்.