headlines

img

ம.பி. மதரசா இடிப்பும் மோடியின் ஹிசார் கேள்வியும்

ம.பி. மதரசா இடிப்பும் மோடியின் ஹிசார் கேள்வியும்

காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் மீது உண்மை யிலேயே அக்கறை இருந்தால் அந்த சமூ கத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைவராக நியமிக்காதது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்?

ஏனென்றால் நூற்று நாற்பதாண்டு பாரம் பரிய காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே மௌ லானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்டோர் தலை வர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஏன் பிரதமர் மோடி, முஸ்லிம் தலைவர் பற்றி பேசுகிறார்?

நாடு முழுவதும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு  எதிராகக் கண்டன இயக்கங்கள் நடத்தப்படு கின்றன. உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சியினரின் எந்தத் திருத்தத்தை யும் ஏற்றுக் கொள்ளாமல் மசோதாவை நிறை வேற்றிவிட்டு, இப்போது அதற்கெதிரான எதிர்ப்பு களை சமாளிப்பதற்காக வழக்கம் போல திசை திருப்பும் வேலையாகவே பிரதமர் மோடி இவ்வாறு பேசுகிறார்.

‘வக்பு திருத்தச் சட்டம் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டி ரைக்’ என்று முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். இது கொள்ளைய டிக்கும் கூட்டத்தின் மீதான தாக்குதலா அல்லது வக்பு சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கான தாக்குதலா என்பது நாட்டு மக்களுக்கு நன்கு புரிந்துள்ளது. அதனால் தான் நாடு முழுவதும் இந்தச் சட்டத்துக்கு மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

வக்பு திருத்தச் சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு பாஜக ஆளும் மத்தியப் பிர தேசத்தில் முதல் நடவடிக்கையாக மதரசா ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. இதுதான்  முதல் பலி. இன்னும் எத்தனை எத்தனையோ? ஏற்கெனவே பாஜக மாநில அரசுகள் முஸ்லிம்களின் வீடு களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டு வைத்த பின்னும் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. இந்நிலையில் இந்தச் சட்டம் கொடி யவர்களின் கைக்கருவியாக எத்தனை நாசங்களை விளைவிக்குமோ?

ஒரு மத அமைப்பு அல்லது நிறுவனத்தில் அதன் சொத்துக்களை நிர்வகிக்க மற்ற மதத்தி னரை திணிப்பது எப்படிச் சரியாகும்? இது மத  சுதந்திரத்துக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரா னதல்லவா? ஆர்எஸ்எஸ்- பாஜக உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல், இந்த சொத்துக்களைக் கைப் பற்றும் நோக்கம் கொண்டதல்லவா?  ஆர்எஸ்எஸ்- சின் இந்துத்துவ வெறியும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபவெறியும் கலந்த இந்த அழிவு அரசியலை நிறுத்த ஒன்றிய பாஜக அரசை ஆட்சி யிலிருந்து அகற்றுவதே நிரந்தரத் தீர்வாகும்.