75 ஆண்டுகள் சுதந்திரம் நிறைவு பெற்ற நாட்டில், இன்னும் மனிதர்கள் மற்றொரு மனித ரின் மலக்கழிவுகளை கையால் அகற்ற வேண்டிய நிலை தொடர்வது நமது ஜனநாயகத்தின் மிகப் பெரும் தோல்வியாகும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை வெளிப் படுத்தும் உண்மைகள் அதிர்ச்சியளிப்பவை. 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 377 துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்துள் ளனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு வாரமும் இரண்டு உயிர்கள் பலியாகின்றன என்பது நம் மனசாட்சியை உலுக்கும் செய்தி.
2013-ல் கொண்டுவரப்பட்ட மானுடக் கழிவு களை கையால் அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டமும், 1993-ல் இயற்றப்பட்ட துப்புரவுத் தொழி லாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறை கட்டுமானத் தடைச் சட்டமும் வெறும் காகிதங்க ளாகவே உள்ளன. இந்த சட்டங்களை மீறுபவர்க ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக் கப்படுவதில்லை. ஒன்றிய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கும், கண்காணிப்பு முறை களின் தோல்வியும் இந்த அவலம் தொடர காரணமாகின்றன.
மனித உரிமை ஆணைய செயலாளர் பரத் லால் சுட்டிக்காட்டியபடி, குறிப்பிட்ட சாதி சமூ கங்களைச் சேர்ந்தவர்களே இந்த ஆபத்தான வேலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது வெறும் தொழில் பிரச்சனை அல்ல - ஆயிரம் ஆண்டுகால சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகும். பெரும்பாலான பாதிக்கப்பட்ட வர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. சுவச் பாரத் மிஷன் (SBM) மற்றும் நமஸ்தே (NAMASTE) போன்ற அரசின் திட்டங்கள் இருந்தும் இந்த சமூக அவலம் தொடர்வது வேதனையளிக்கிறது.
நாட்டில் சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தும் நாம், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோக்களையும், தானியங்கி இயந்தி ரங்களையும் உருவாக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமை ஆணையம் பரிந்து ரைத்தபடி, ஒரு மாநிலத்தில் முன்னோடித் திட்ட மாக தொடங்கி, படிப்படியாக அனைத்து மாநிலங்க ளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாநி லமும் குறைந்தபட்சம் ஆயிரம் ரோபோக்களை யாவது வாங்குவதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து புதிய தீர்வுகளை உருவாக்குவதோடு, அவற்றை பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விக்கு முழு உதவித்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
வெறும் சட்டங்களும், திட்டங்களும் மட்டும் போதாது. அரசியல் உறுதிப்பாடும், சமூக விழிப்பு ணர்வும் தேவை.