வெறுப்புணர்வு திரைப்படங்களால் அதிகரிக்கும் கலவரங்கள்
உலகில் பல நாடுகளிலும் அரசர்கள் அரசர்க ளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தா லும் ஒரு அரசர் என்ன செய்வாரோ அதைத்தான் அவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தி யாவில் மட்டும் தான் முகலாய மன்னர்கள் மட்டுமே கொடுங்கோலர்கள் போலதிட்டமிட்டு சித்தரிக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் வெளியான ‘சாவா’ திரைப்படம் தான் நாக்பூர் வன்முறைக்கு காரணம் என்பதை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் வரலாற்று நிகழ்வுகளை திரித்து அல்லது உண்மைக்கு மாறான தகவல்க ளை கொண்டு திரைப்படம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.
நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களில் இதுபோன்ற திரைப்படங்கள் அதி கரித்துள்ளன. சுமார் 20 முஸ்லிம் எதிர்ப்பு படங்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வெளி யிடப்பட்டது. கேரளா ஸ்டோரி, ஆர்ட்டிக்கிள் 370, காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங் களை பாஜக மாநில அரசுகளே ஊக்குவித்தன. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்து விளம்பரப்படுத்தினர்.
தற்போது ஒளரங்கசீப்பை வைத்து மக்களை பிளவுபடுத்த தயாராகி வருகிறார்கள். மகாராஷ்டி ராவின் குல்தாபாத்தில் 17 ஆம் நூற்றாண்டின் முக லாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில அமைப்புகள் கோரி வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மராத்வாடாவில் இந்த அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. முகலாய மன்னர்களின் நினைவிடங் கள் மட்டுமல்ல, பழங்கால மசூதிகளையும் தர்காக் களையும் தோண்டி அதனடியில் என்ன இருக்கிறது என்று ஆராய முயற்சிக்கிறார்கள். '
காசி, மதுரா மட்டுமல்லாமல், உத்தரப் பிரதே சத்தில் உள்ள சம்பல் மசூதிக்கு அடியில் 5,000 ஆண்டுகள் பழமையான கோயில் இருப்பதாக கூறி வருகிறார்கள். வட இந்தியா முழுவதும் இத்த கைய சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி விடுகின்றன. சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை சமூகத்தை வேறுபடுத்துவதற்கான ஒரு புதிய கருவியாக மாறியது. அன்றைய தினம் வடஇந்தியாவில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டி லேயே முடக்கப்பட்டார்கள். எனவே திரைப் படங்கள் என்ற பெயரில் வரலாற்றை திரித்து மக்களை பிளவுபடுத்தும் படங்களை தடை செய்ய வேண்டும். மக்களும் அத்தகைய திரைப்படங் களை புறக்கணிக்க வேண்டும்.