உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அமாவாசை யன்று நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இது மாநில அரசின் நிர்வாக அலட்சியத்தால் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ் மற்றும் சாமியார்கள் புடைசூழ கங்கையில் மூழ்கி எழுந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதலமைச்சர்களும் நீராடி வருகிறார்கள். இவர்களுக்காக விஐபி பகுதி, விஐபி பாஸ், விஐபி பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பாவி பக்தர்கள் 4 கி.மீ நடந்து வந்தால்தான் நீராடி விட்டுச் செல்லமுடியும்.
பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்தின் திறமை யின்மையால் நகரில் எல்லா இடத்திலும் போக்குவரத்து நெரிசலையே காணமுடிகிறது. விஐபி பிரமுகர்களுக்கு செய்யப்பட்ட பாது காப்பு ஏற்பாடுகளில் நான்கில் ஒரு பகுதிகூட சாமானிய மக்களுக்கு செய்யப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா வுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய உத்தரப்பிரதேச நிர்வாகம் விஐபி நீராட லுக்கு மட்டும் அக்கறை காட்டியதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருவதா கவும் ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் பாஜக ஆதரவு ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த போதே சில பெண்கள் இடை மறித்து தங்களது குமுறலை வெளிப்படுத்தினர். கங்கை நதியின் கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் மலம் கழிக்கப்பட்டு திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது. சாமியார்க ளும் அகோரிகளும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதாகவும் இந்துக்கள் புனித நதி என்று கருதும் கங்கை அசுத்த நதியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரி வித்தனர்.
கரையோரங்களில் பல இடங்களில் தனியார் சொகுசு விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள வசதிகளோடு கூடாரங்களை அமைத்துள்ளன. அப்பாவி மக்களுக்கு கும்பமேளா. தனியார் பெரு நிறுவனங்களுக்கு பணத்தை கொட்டித் தரும் விழாவாக மாறியுள்ளது. விமான நிறுவனங்களும் பிரயாக்ராஜ் செல்லும் விமானங்களின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கின்றன.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கங்கை நதியை தூய்மைப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றும் அசுத்த மான நதியாகவே அது காட்சியளிக்கிறது. கங்கை பாயும் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் கங்கையின் நதியோரம் கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.