அமித் ஷாவின் அளப்பு
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய ஆட்சிப் பணியை முறையாக கவனிக்க வில்லை என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலமும், மணிப்பூர் மாநிலமும் சாட்சி சொல்லும். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையை ஒன்றிய அரசினால் தடுத்து நிறுத்த முடிய வில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது பாஜக கூட்டணி அரசு. இதை இரண்டா வது விடுதலை என்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் அந்த மாநிலத்தின் அமைதியை இவர் களால் திரும்பக் கொண்டுவர முடியவில்லை
இந்த நிலையில் அமித்ஷா ஜோதிடராகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேற்குவங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் தன்னுடைய அதீத ஆசையை ஆரூடமாக வெளிப்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கேரள இடதுஜனநாயக முன்னணி ஆட்சி மீது அவதூறை அள்ளி வீசியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது வெளி நாடு சென்றுள்ளார். இவர்களது ஆட்சியில் தங்கக் கடத்தல் ஊழல் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டுக்கு ஒரு மாநில முதல்வர் செல்வது குற்றமா? அப்படிப் பார்த்தால் பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டில் இருப்பதைவிட வெளிநாட்டில்தான் அதிகமாக இருக்கிறார். இதை குற்றம் என்பாரா அமித் ஷா? கேரள இடதுஜனநாயக முன்னணி அரசுக்கு களங்கம் விளைவிப்பதற்காக இவர்களால் தங்கக் கடத்தல் ஊழல் வழக்கு ஜோடிக்கப்பட்டது. இதில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் முதலமைச்சர் பினராயி விஜயன் பெயரையும் கோர்த்துவிட்ட னர். ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடிய வில்லை. முதல்வருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் தாங்கள் அமைத்த திரைக்கதையை மீண்டும் எழுதிக் காட்டுகிறார் அமித் ஷா.
இதில் உச்சபட்ச குரூர நகைச்சுவை என்ன வென்றால் கடந்த 11 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மீது எந்தவொரு குற்றச்சாட்டை யும் கூற முடியவில்லை என்று அமித் ஷா கூறியிருப்பதுதான். கடந்த 11 ஆண்டுகளில் ஒன்றா இரண்டா என ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ரபேல் விமான கொள்முதல் ஊழல் துவங்கி, ஒன்றிய தணிக்கை வாரியம் பட்டியலிட்ட முறைகேடுகள் வரை ஏராளம். பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளி களான அம்பானி, அதானி வகையறா மீது எழுந்த எந்தவொரு குற்றச்சாட்டையும் விசாரிக்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை
கூட்டாளிகளின் ஊழல்களை மூடி மறைப்ப தற்காக நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் முடக்கியவர்கள் இவர்கள். இந்த இலட்சணத்தில் ஊழல் புகாரே எழவில்லை என்று அமித் ஷா கொஞ்சம் கூட கூசாமல் கூறியுள்ளார். கேரள அரசு அனைத்து வகையிலும் மக்கள் நல அரசாக திகழ்கிறது. இதை அமித் ஷா வகையறாவால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது.