headlines

img

இந்தியா - சீனா - அமெரிக்கா

இந்தியா - சீனா - அமெரிக்கா

21 ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது, இந்தி யா- சீனா ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமின்றி,  உலகளாவிய ஸ்திரத் தன்மைக்கு அவசியம். இந்தியா- சீனா உறவு புதியது அல்ல. வரலாற்றுப் பதிவுகளை நோக்கினால் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கற்றுக் கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளது சரியான ஒன்றே. இன்றுள்ள உலகச் சூழலில் இந்தியா, சீனா, ரஷ்யா ஒத்துழைப்பு அவசியமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் அயல்துறைக் கொள்கை அமெரிக்க சார்பிலான தாக இருக்கக்கூடாது. வளர்முக நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை  பேணுவது அவசியம் என்றும் கட்சி வலி யுறுத்துகிறது.  

பிரதமர் மோடி அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், இந்தியா- சீனா இடையே ஆரோக்கிய மான போட்டி நிலவுவது அவசியம் என்றும், அது  மோதலாக மாறிவிடக்கூடாது என்றும் கூறியுள் ளார். இரு நாடுகளிடையே வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஆரோக்கியமான போட்டி நிலவுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இதே அளவு கோலை அமெரிக்காவுக்கும் மோடி பொருத்திப் பார்க்கிறாரா என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  பற்றி கூறும்போது, துணிச்சலானவர், சுயமாக முடி வெடுப்பவர், அமெரிக்காவுக்கான அவரது அர்ப்ப ணிப்பு அசைக்க முடியாதது என்றெல்லாம் புகழா ரம் சூட்டியுள்ளார். வலதுசாரி கருத்தியல் கொண்ட இந்த இருவருக்கிடையிலான தனிப்பட்ட உறவு குறித்து கேள்வி இல்லை. ஆனால் இந்திய நலனுக்கெதிரான டிரம்ப்பின் நடவடிக்கைகளை கூட பிரதமர் மோடி கண்டிக்கத் தயங்குவது ஏன்?  சீனாவுடன் ஆரோக்கியமான போட்டி அவசியம் என்றால், அமெரிக்காவுடனும் அந்த அணுகு முறையை பின்பற்ற வேண்டுமல்லவா?  

அமெரிக்க நலனுக்கான டிரம்ப்பின் அர்ப்ப ணிப்பை பாராட்டும் பிரதமர் மோடி இந்திய நலனை அமெரிக்காவிடம் விட்டுக்  கொடுக்க மாட்டேன் என்று கூறத் தயங்குவது ஏன்? டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியான பிறகு இந்தியாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்திய குடிமக்களில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என கண்டறி யப்பட்டவர்களை கையில் விலங்கு மாட்டி, காலில் சங்கிலி மாட்டியும் நாடு கடத்துவதை குறைந்த பட்சம் கண்டிக்கக் கூட மோடி ஏன் முன்வர வில்லை?

அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கேற்ப அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி உள்ளிட்ட பொ ருட்களுக்கு வரி குறைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் பொ ருட்களுக்கு வரியை கணிசமாக உயர்த்துகிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து பல்லா யிரம் கோடி ஆயுத கொள்முதலுக்கு மோடி அரசு ஒப்புக்கொள்கிறது. மோடி அரசின் பாரபட்சமான அயல்துறைக் கொள்கை இந்திய நலனை பாதுகாக்காது.