தேர்தல் வந்தாலே பிரதமர் மோடி பதற்றமாகி விடுகிறார். அதனால் பிதற்றவும் ஆரம்பித்து விடு கிறார். வரும் மே மாதம் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஞாயிறன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து மாண்டியா மாவட் டத்தில் பேசிய மோடி, அவருக்கு புதைகுழி தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கி றது என்று புலம்பியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் பாஜக படுதோல்வியையே சந்திக்கும் என்பதை தெரிந்து கொண்டு பரிதாபம் தேடுவ தற்காக கீழிறங்கிப் பேசியிருக்கிறார். ஆனால் அது எடுபடுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது போலும். அதனால் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபடு கிறேன் என்று கூறியிருக்கிறார்.
பாஜக ஆட்சி 2014இல் அமைந்ததிலிருந்து அவர் யாருடைய வாழ்வை மேம்படுத்தவும் யாரு டைய வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாததல்ல. மதவெறி சக்திக ளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நண்ப ராகச் செயல்படுவது நாடறிந்தது தானே.
குறிப்பாகச் சொல்வதென்றால் கவுதம் அதானி யின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதன் பலன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டா வது இடத்தைப் பிடித்ததிலிருந்தே அறிந்து கொள்ளலாமே.
2014இல் 800 கோடி டாலர் சொத்துடையவராக 609ஆவது இடத்தில் இருந்த அதானி 2022 இல் 140,00 கோடி டாலர் சொத்துடையவராக வளர்ந்திட காரணமாக இருந்த பெருமை மோடியைத்தானே சாரும். அதனால் ஏழைகளின் வாழ்வை மேம் படுத்த தொடர்ந்து பணியாற்றுவதாகக் கூறியி ருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அம்பானியின் வளர்ச்சி 400 விழுக்காடு என்றும் அதானியின் வளர்ச்சி 1830 விழுக்காடு என்றும் ஹுருன் குளோ பல் ரிச் பட்டியல் தெரிவிப்பது மோடி உண்மையைத் தான் சொல்கிறார் என்பதை உணர்த்துகிறதே!
நாட்டின் ஏழை, எளிய மக்கள் 81.35 கோடி பேருக்கு அதாவது மூன்றில் இரண்டு பங்கு மக்க ளுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.3 அல்லது 2க்கு வழங்கி வந்ததை 1.1.23 முதல் நிறுத்து வதாக அறிவித்தது ஏழைகளின் வளர்ச்சிக்காகத் தானே?! மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் 100 நாள் வேலை கொடுப்பதற்கு ரூ.2.74 லட்சம் கோடி தேவைப்படும். ஆனால் மோடி அரசு அந்த நிதியை ஒதுக்குவதை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு 33 விழுக்காடு நிதியை குறைத்து ரூ.60 ஆயிரம் கோடியாக வெட்டியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக் கிய நிதி பட்ஜெட்டில் 2.1 விழுக்காடு என்றால் இந்த ஆண்டு அது 1.3 விழுக்காடாக வீழ்ந்து விட்டது. இது தான் ஏழைகளின் வளர்ச்சிக்காக மோடி பணி யாற்றுவதன் லட்சணம்.
ஏழை மக்களுக்கு ஒதுக்க நிதியும் மனமும் இல்லாத பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்க ளின் கடன்களை ரூ.10லட்சம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்திருக்கிறது. பாவம் கார்ப்பரேட் குசே லர்கள், அவர்களுக்காக அல்லும் பகலும் உழைக் கும் மோடிக்கு நாட்டு மக்கள் ஓய்வு கொடுத்தால் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்.