இந்திய நீதிமன்றங்களில் வரவேற்கத்தக்க தீர்ப்புகள் வழங்கப்படுவது அண்மைக் காலமாக அரிதாகிக் கொண்டே வருகிறது. புதனன்று கேரள மாநிலம் அட்டப்பாடி மனநலம் பாதிக் கப்பட்ட இளைஞர் மது கொலை வழக்கில் 13 பேருக்கு ஏழாண்டு தண்டனையும் ஒருவ ருக்கு 3 மாத தண்டனையும் 2 பேர் விடுதலை யும் செய்யப்பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் 5 ஆண்டிலேயே தீர்ப்பு கிடைத்துள் ளதற்கு அந்த மாநில காவல்துறையின் செயல் பாடு முக்கியமானதாகும்.
ஆனால் இதே நாளில் உத்தரப்பிரதேசம் ஹாஸ்மிபுரா, மல்யானாவில் 350க்கும் அதிகமா னோர் அனைவரும் சிறுபான்மை முஸ்லிம்கள்- கொல்லப்பட்ட வழக்கில் 35 ஆண்டு கழித்து குற்ற வாளிகள் 41 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. இது பற்றி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், மலியானா கிராமத்தில் இருள் இறங்கியுள்ளது என்று வேதனையின் விளிம்பில் மனம் நொந்து கூறியுள்ளார்.
1987 மே மாதத்தில் இந்துமத வெறியர்கள், காவல் துறை, துணை ராணுவப்படை ஆகியவை முற்று கையிட்டு தீவைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை வெறித் தாண்டவம் நடத்தி உயிர்களைப் பறித்த, உலகையே அதிர்ச்சியடைய- வெட்கித் தலை குனிய வைத்த கொடூரச் சம்பவத்தில் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டது நீதித்துறையின் மீதான நம்பிக்கையையே தகர்த்துவிடக் கூடியதாகும்.
இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமத மாகிக் கொண்டிருக்கிறது என்று உ.பி. முன்னாள் காவல்துறை இயக்குநர் விபூதி நாராய ணன் ராய் என்பவர் அலகாபாத் நீதிமன்றத்தில் 2021இல் மனுத்தாக்கல் செய்தார். அவர் இந்த தீர்ப்பு, இந்த மாநிலத்தின் மிகப் பெரும் தோல்வி என்று குறிப்பிட்டிருக்கிறார். காவல்துறை, அரசியல் தலையீடுகள் மற்றும் பாரபட்சமாக நடந்து கொண்ட பத்திரிகைகளுடன் பாதிக்கப் பட்டவர்கள் படுதோல்வியை அடைந்துள்ளனர் என்றும் துயரத்துடன் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பின் 26ஆவது பக்கத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்து இறந்த இளைஞர், வாளால் கூறு போடப்பட்ட தந்தை, தீயிலிட்டு எரிக்கப்பட்ட 5 வயது குழந்தை பற்றி குறிப்பிட்டி ருந்தாலும் போதிய சாட்சிகளும் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
உ.பி.மாநிலம் ஹத்ராஸ் வழக்கு, குஜராத்தின் கலோல் பகுதியில் 11 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கு எல்லாம் நீதிக்கு சோதனையாகவே அமைந்திருந்தது.
பாசிச பாணி பாஜக ஆளும் மாநிலங்களில் அண்மையில் வந்த வழக்குகளின் தீர்ப்புகளில் எல்லாம் இதே நிலைமை தான் என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தது தான். எனினும் கடைசிப் புகலிடமான நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது நல்லதல்ல!