இந்திய விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் கைமாற்றி விடும் வகையில் மோடி அரசினால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்க ளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருப்பது ஓராண்டு காலமாக அயர்வின்றி உழுகுடி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த தேசபக்த அறப் போரில் விதை நெல்லாக விழுந்து தியாகம் செய்த விவசாய போராளிகள் அனைவருக்கும் இந்திய தேசம் இந்நாளில் வீரவணக்கம் செலுத்துகிறது.
உலகின் அநீதிகளை போராட்டத்தின் மூல மாகவே சரி செய்யமுடியும் என்று சமர் செய்யும் அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதாக விவ சாயிகள் நடத்திய வீரகாவியம் விளங்குகிறது.
விவசாயிகள் மீது கொண்ட அக்கறை காரண மாக இந்தச் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி இப்போதுகூட கூற வில்லை. மாறாக, விவசாயிகளுக்கு ஆதரவா கவே இந்தச் சட்டங்களை கொண்டு வந்ததாக வும், ஆனால் சிலர் அதை புரிந்து கொள்ள வில்லை என்றும் தனது அரசின் தவறான நடவ டிக்கையை நியாயப்படுத்தவே முனைந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வி அடுத்தடுத்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல், நாடாளு மன்ற தேர்தல் நெருங்குகிற நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த கருப்புச் சட்டங்கள் கைகழுவப்பட்டுள்ளன. எனினும் மின்சார திருத்தச் சட்டம் போன்ற விவசாயிகள் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற வைப்பதன் மூலமே விவசாயிகளையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்.
கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலி லும், கொடூரமான பனியிலும், குளிரிலும் அஞ்சாது போராடிய விவசாயிகளை எவ்வளவு பாராட்டினா லும் தகும். நாட்டின் தொழிலாளி வர்க்கம் துவங்கி அனைத்துப் பகுதி மக்களும் விவசாயிகளின் பின்னால் அணி திரண்டு நின்றதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
போராடிய விவசாயிகளை ஒரு முறை கூட அழைத்து பேசாததன் மூலம் மிகப் பெரிய அவக்கேட்டை நாட்டின் பிரதமர் சம்பாதித்துள் ளார். மறுபுறத்தில் இழுத்தடித்து அலட்சியப் படுத்தி, அடக்குமுறைகளை ஏவிவிட்டு இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட முடியும் என்ற ஆட்சியாளர்களின் ஆணவ போக்கிற்கு விவசாயிகள் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்துள்ளனர்.
விவசாயிகளை தேச விரோதிகளாக சித்த ரிப்பது துவங்கி துப்பாக்கிச்சூடு வரை அவதூறு களையும் அடக்குமுறைகளையும் தூள் தூளாக்கி விவசாய வர்க்கம் வென்றிருக்கிறது. எனினும் நாடாளுமன்றத்தில் மோசடியாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத் திருத்தங்களை திரும்ப நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கின்றன போராடும் விவசாயிகளின் அமைப்புகள்.
விவசாயத் துறையை மட்டுமின்றி அனைத்துத் துறைகளையும் நாசமாக்கத் துணிந்துவிட்டது மோடி அரசு. போராட்டத்தின் மூலமே இந்த முயற்சியை முறியடிக்க முடியும் என்பதை இந்திய உழவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். போராட்டக் களம் மேலும் மேலும் விரிவடைவதன் மூலமே தேசத்தை பாதுகாக்க முடியும்.