headlines

img

முகம் தெரியாதவர்களின் பின்னால் முகம் மறைப்பதன் பின்னணி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்வில் உரையாற்றும்போது, தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சி நாதனை புகழ்ந்துரைத்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பு வீரர் வாஞ்சிநாதனின் பெயரால் அழைக்கப்படுவதை குறிப்பிட்டிருக்கிறார். 

அவரது தியாகம் குறித்து பெருமிதம் கொள்வ தற்கு தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ளது. ஆனால் பாஜக தலைவர்களுக்கு, சுதந்திரப் போராட்டத் தில் ஈடுபடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அந்த உரிமை உண்டா? 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முகம் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களது தியாகத்தையும், புகழையும் நாடு முழுவதும் பரப்பிட வேண்டும் என்றும் திங்களன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது குறிப்பிட்டிருக்கிறார். 

ஆனால் முகம் தெரிந்த தமிழக மற்றும் பிற மாநில சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வீரர்க ளை புறக்கணிப்பதும், கண்டுகொள்ளாமல் விடு வதும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையா கவே இருந்து வருகிறது. அதை கடந்த குடியரசு தின தில்லி அணிவகுப்பின்போது நாட்டு மக்கள் காண முடிந்தது. 

தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்க ளான வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் போன்றவர்களின் சிலைகள் இடம் பெற்றிருந்த தமிழகத்தின் அலங் கார ஊர்தியை அணிவகுப்புக்கு தேர்வு செய்யா மல் அவமானப்படுத்தியது பாஜக ஒன்றிய அரசு.  

தமிழகம் மட்டுமின்றி, சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு இடம் பெற்றிருந்த கேரளத்தின்  அலங்கார ஊர்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டா ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தியையும் தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்தது.

இப்போது முகம் தெரியாத தியாகிகளை தேடி கண்டுபிடிக்கச் சொல்பவர்கள், முகம் தெரிந்த தியாகிகளுக்கு செய்த அவமரியாதையை எவ் வாறு ஈடுகட்டுவார்கள்? சுதந்திரப் போராட்டத் தில் பங்கேற்காத முன்னோர்களை தலைவர்க ளாக கொண்ட ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரி வான பாஜக தன்னுடைய ஆட்சியில் அவர்களது  தலைவர்களை எப்படியாவது சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்குள் கொண்டு வருவ தற்காக படாதபாடுபடுகிறது. அதன் ஒரு பகுதி தான் புதுச்சேரியில் சாவர்க்கரை சுதந்திரப் போ ராட்ட வீரராக சித்தரிக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராசனின் நடவடிக்கை. 

முகம் தெரிந்த தலைவர்கள் இல்லாத சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்த இயக்கம் தனது முகத்தை காண்பிப்பதற்காக முகம் தெரியாத தியாகிகளின் பின்னால் ஒளிந்து கொள்வது ஒரு வரலாற்றுச் சோகம்தான்.