உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு வேறுபட்ட பிம்பம் ஒன்றுள்ளது. குறிப்பாக இன்றைய ஜனநாயக உலகில் மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் நம்பத்தகுந்த தலைவராக பிரதமர் மோடி அறியப்படுகிறார் என்று ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்க ளன்று தில்லியில் அமைந்துள்ள தேசிய தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசி யுள்ளார்.
பிரதமர் மோடி 2014 நாடாளுமன்றத் தேர்த லின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம், விவசாயிகளின் விளை பொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை வழங்குதல் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு கொடுத் தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தபின் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. அவையெல்லாம் வெறும் தேர்தல் வாக்கு றுதிகள்தான். அதை நிறைவேற்ற வேண்டியது கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்திலேயே பாஜகவின் மூத்த தலைவரும், அன்றைய ஒன்றிய நிதி அமைச்சருமான அருண்ஜெட்லி கூறினார்.இவையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி நம்பத்தகுந்தவர் என்கிற பிம்பத்தையா உருவாக்கியிருக்கிறது?
வளர்ச்சி என்று கூறி நாட்டுமக்கள் முன்னேற்றம் பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி அறிவித்த திடீர் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், கொரோனா திடீர் முடக்கம் போன்ற முன்னெச்சரிக்கையற்ற முன்கணிப் பற்ற செயல்பாடுகளால் தொழில்கள் முடங்கி மக்கள் வேலையிழந்து நிம்மதியிழந்து சித்ர வதைகளும் கொடுமைகளையுமே அனுபவித்த னர். இவையெல்லாம் நரேந்திர மோடி நம்பிக் கைக்குரிய தலைவர்தான் என்பதையா பறை சாற்றியது?
சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் டீசல் மூலப்பொருள் விலை குறைந்தாலும், குறை யாமல் அதிகரிக்கும் விலை ஆகியவற்றால் குடும்பங்கள் படுகின்ற துயரங்களும், துன்பங்க ளும் அதிகரித்திருப்பது தானா நம்பிக்கைக் குரிய தலைவரின் செயல்பாடு?
ஆனால் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டில் வேறொரு பிம்பம் உள்ளதாக அமைச்சர் ஜெய் சங்கர் கூறுவது யோகா மாஸ்டர் என்கிற புதிய அந்தஸ்தைத்தானா? அவர் ஜனநாயகத்திற்கு நம்பிக்கையானவராக இல்லை என்பதை, ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான நடவடிக்கை கள் தொடர்பாகவும், குஜராத் கலவரம் தொடர் பான பிபிசி ஆவணப்படம் தொடர்பாகவும் எடுத்த நடவடிக்கைகள் உணர்த்தவில்லையா?
உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற் கும், அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கும், இனவெறி அழிப்பில் ஈடுபடும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் நம்பிக் கைக்குரிய தலைவராக நரேந்திர மோடி திகழ லாம். ஆனால் நாட்டு மக்களுக்கும் நாட்டுக் கும் நம்பிக்கைக்குரிய தலைவராகத் திகழ வில்லை என்பதையே அவரது செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.