headlines

img

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடியே பொறுப்பு

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக் கிறது. இதுகுறித்து வாய்திறக்கவே பிரதமர் நரேந் திர மோடி 78 நாட்கள் எடுத்துக்கொண்டார். இப் போது நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில் அவையில் இது குறித்து விளக்கமளிக்கக் கூட அவர் தயாராக இல்லை. 

மணிப்பூர் மாநிலத்தை எட்டிக்கூட பார்க்காத  பிரதமர் இப்போது இதுதொடர்பான நாடாளு மன்ற விவாதத்திலும் பங்கேற்க மறுக்கிறார்.கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதம ரின் நெருங்கிய கூட்டாளியான கவுதம் அதானி யின் மோசடி குறித்து விவாதிக்க மறுத்து நாடா ளுமன்றத்தை ஆளுங்கட்சியான பாஜகவே முடக்கியது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவ ரான ராகுல்காந்தி வெளி நாட்டில் இந்தியாவை இழிசெய்து பேசிவிட்டதாக புனைந்து கூறி இரு அவை களையும் நடத்தவிடாமல் செய்தது பாஜக. 

இப்போது மழைக்காலக் கூட்டத்தொடரை யும் முறையாக நடத்தவிடாமல் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முடக்க முயல்கின்றன.  

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் அனு ராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலைமை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறது ஒன்றிய அரசு. 

பெண்கள் மீதான வன்முறைகள் வேதனை அளிப்பதாக போலிக்கண்ணீர் வடிக்கும் அமைச்சர் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் முறையாக விவாதம் நடத்தி பிரதமர் பதிலளிப்பார் என்று கூறத் தயங்குவது ஏன்? 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி  சிலை அருகே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  போராட்டம் நடத்தப்படும் என்று ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் அறிவித்திருந்த நிலை யில் இராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி.க்கள் அந்த இடத்தில் மாநில அரசுக்கு எதிராக போரா ட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு காரணம் பிரதமர் மோடியின் பொறுப்பற்ற பேச்சுதான்.

மணிப்பூர் தொடர்பாக தாமதமாக வாய் திறந்த பிரதமர், சத்தீஷ்கர் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நிலையில்தான் இராஜஸ் தான் மாநில பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோருவது குறைந்தபட்ச கோரிக்கையே ஆகும். பிரதமர் இதற்கு இசைந்து விவாதத் திற்கு பதலளிக்க முன்வந்தால் நாடாளுமன்றம் நடைபெற ஏதுவாகும். ஆனால் ஒன்றிய அரசுக்கு அந்த நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மணிப்பூரை முடக்கியவர்கள் இப்போது நாடாளு மன்றத்தையும் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள்.