headlines

img

ஆட்சி மாறியது; காட்சி மாறாது!

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளு மன்றத்தில் 200 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தொழிலாளர் கட்சி எனப்படும் லேபர் கட்சி  தற்போது 435 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தலை மையிலான பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சி யானது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இழந்து விட்டது. 650 இடங்கள்  கொண்ட நாடாளு மன்றத்தில் 121 இடங்கள் மட்டுமே  அக்கட்சிக்கு கிடைத்துள்ளன.  பிரிட்டன் அரசியல் வர லாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் முதல்முறை யாக  மிக மோசமான தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. 

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைய 20  மாதங்கள் உள்ள நிலை யில் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்போவதாக கூறி பிரதமர் ரிஷிசுனக், முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை சந்திந் தார். ஆனால் தேர்தல் முடிவு அவரது அதிதீவிர தனியார்மய மற்றும் சிக்கன நடவடிக்கை கொள் கைகளுக்கு எதிரான, பிரிட்டன் மக்களின் சரியான பதிலடியாக அமைந்துள்ளது. 

இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், சுகாதாரம், வீட்டு வசதியை மேம்படுத்துவேன் என்று உறுதியளித்து பிரச்சாரம் செய்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க நிலை பாட்டோடு ஒத்துப் போகிறவர். ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டவர்.  இதனால் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எத்தகைய மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

தற்போது வெற்றி பெற்று பிரதமராக பதவி யேற்கப் போகும் கெய்ர் ஸ்டார்மர், முந்தைய பிரத மர் ரிஷி சுனக் போலவே ஒரு தீவிர இடதுசாரி எதிர்ப்பாளர். தீவிர முதலாளித்துவ, வலதுசாரி கொள்கைகளை அமலாக்கும் வேட்கைக் கொண்டவர். அதனால்தான் இவர், லேபர் கட்சிக்குள் செயல்பட்டு வந்த ஜெர்மி கோர்பின்  உள்ளிட்ட இடதுசாரி சிந்தனையாளர்களை கட்சி யிலிருந்து ஒழித்துக் கட்டினார். கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான கொள்கைகளால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் பிரிட்டன் மக்கள், தங்கள் முன்பு உள்ள ஒரே மாற்றுவாய்ப்பான லேபர் கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கி யிருக்கிறார்கள்.   

இத்தேர்தலில் முற்போக்காளர் ஜெர்மி கோர்பின் பிரிட்டனின் வடக்கு இலிங்டன் தொகுதியிலிருந்து மீண்டும் வெற்றிபெற்றுள்ளது மட்டுமே ஆறுதல் அளிக்கக்கூடியது. தொழிலா ளர் கட்சியில் இருக்கும் இடதுசாரிக் கொள்கை கொண்ட அவர் 1983ஆம் ஆண்டிலிருந்து  தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறார். அவரது முற்போக்கு கருத்துகளுக்காக தொழிலாளர் கட்சி யின் தலைமை அவருக்கு போட்டியிட அனுமதி மறுத்தது. இருப்பினும்  அவர் சுயேச்சையாக போட்டியிட்டு அதிகாரப்பூர்வ தொழிலாளர் கட்சி வேட்பாளரான மிகப்பெரிய செல்வந்தரை தோற்க டித்து மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளார்.