“சுதந்திரமான பத்திரிகை ஜனநாயகத்தின் அடித்தளம்” 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரா வதற்கு முன்பு பேசியது. பிரதமரான பின்பு ஊடக சுதந்திரத்தை மட்டுமல்ல நாட்டின் ஜனநாய கத்தையே படிப்படியாகக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார். அதன் தொடர்ச்சியே பிபிசி ஊட கத்தின் மீதான வருமான வரி சோதனை.
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் ஒன்றிய அரசை ஆதரிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக விமர்சித்தாலோ, சங்பரிவார் அமைப்புகளின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டாலோ ஊட கங்கள் முடக்கப்படும் என்பது எழுதப்படாத விதி யாக மாறியிருக்கிறது. குறிப்பாக மோடி பிரதம ரானதிலிருந்து இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்த்தப்பட்டு வருகிறது. 2014இல் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140 ஆவது இடத்திலிருந்தது. தற்போது இந்தியா 150 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
2002 குஜராத் கலவரம் குறித்து உண்மையைப் பேசினாலோ, விமர்சித்தாலோ அவர்கள் ஒன்று கொல்லப்படுகிறார்கள்; அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஹரன் பாண்டியா உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். சஞ்சீவிபட், ஸ்ரீ குமார் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் சிறை யில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மறுபுறம் கலவர வழக்கிலிருந்து மோடி, அமித்ஷாவை விடு வித்த நீதிபதிகளுக்கு ஓய்வுக்கும் பின்னும் ஆளு நர் உள்ளிட்ட உயர் பதவிகள் வழங்கப்படு கின்றன. இதுதான் சங்பரிவாரின் நீதி!
பிபிசி ஆவணப்படத்தில் “குஜராத் வன் முறையில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல் லப்பட்டனர். அந்த வன்முறையில் “தண்டனை கிடைக்காத சூழலுக்கு” மோடியே “நேரடி பொறுப்பு” எனப் பிரிட்டன் வெளியுறவு அலுவலக அறிக்கையை பிபிசி வெளியிட்டிருக்கிறது. இந்த உண்மை மோடிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. ஆகவேதான் `பிபிசி என்பது வெளி நாட்டு ஊடகம். அவர்கள் இதில் தலையிடக் கூடாது’ என தேசபக்த போர்வையைப் போர்த்திக் கொண்டு தப்பிக்கப் பார்க்கிறது.
பிபிசி ஆவணப்படத்தில் உண்மையில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க லாமே? எதற்காக சமூக ஊடகங்களில் கூட வெளி வராமல் தடை செய்ய வேண்டும்? இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென இப்போது ஏன் வருமான வரி சோதனை? கேட்டால், `இது சோதனை அல்ல, நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றி வெறும் ஆய்வு மட்டுமே என்றார்கள். அப்படி யென்றால் எதற்காகப் பத்திரிகையாளர்களின் மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்?
ஏற்கனவே ஒன்றிய அரசை விமர்சித்த தி வயர், ஆல்ட், நியூஸ் கிளிக், நியூஸ் லாண்ட்ரி உள்ளிட்ட ஊடகங்களுக்கு எதிராகக் கட்ட விழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளை நாடறியும். ஊடகங்கள் மீதான இத்தகைய அடக்குமுறை ஜனநாயகத்தைச் சவக்குழியில் தள்ளி, சர்வாதி காரத்திற்கு வழிகோலும். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.