headlines

img

வார்ப்பு இரும்பு விலையை கட்டுப்படுத்துக!

தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்க ளில் உள்ள மக்கள் பிழைப்பு தேடி முதலில் செல் லும் நகரம் கோவை அல்லது திருப்பூர் ஆகும். மாவு அரைக்கும் இயந்திரம், பம்புகள், ஆயத்த ஆடைகள், பனியன் உற்பத்தி என பல்வேறு தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. அவை அனைத்தும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறு வனங்கள் ஆகும். இந்த  தொழில்களை நம்பி  உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஏராளமான நிறுவனங்களும் உள்ளன.

கடந்த சில மாதங்களாகக் கோவையில் உள்ள பம்ப் மற்றும் மோட்டார் நிறுவனங்கள் ஷாஃப்ட்களை (மோட்டார் தண்டு பாகம்) குஜராத்தில் இருந்து கொள்முதல் செய்து வரு கின்றன. கோவையில் இதனைத் தயாரிக்கும் நிறுவனங்களை விட  20 விழுக்காடு குறைந்த விலையில் ஷாஃப்ட்களை  குஜராத் நிறுவனங்க ளால் வழங்க முடிகிறது என்று இதற்கு காரணம் கூறப்படுகிறது. 

கடந்த காலங்களிலும்  குஜராத்திலிருந்து இவை கொள்முதல் செய்யப்பட்ட போதிலும் தற்போது இதன் அளவு அதிகரித்துள்ளது. அங் குள்ள நிறுவனங்கள் இவற்றை தயாரிக்க துல்லியமான இயந்திரங்களை நிறுவியுள்ளதா லும்  கச்சாப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப் பதாலும்  உதிரி பாகங்களைக் குறைந்த விலை யில் தயாரித்து வழங்க முடிகிறது.

கோயம்புத்தூரில் உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் தரத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், குஜராத்தில் உள்ள நிறுவனங் கள் விலைக்கு போட்டியாக உள்ளன என்று கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தினர்  கூறு கிறார்கள். வார்ப்பு இரும்பு விலை உயர்வு காரண மாக தமிழக நிறுவனங்களால் குறைந்த விலை யில் இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. குறிப்பாக குஜராத்தில் ஒரு கிலோ வார்ப்பு இரும்பு விலை 80 ரூபாயாக உள்ளது. இது கோவையில் 95 ரூபாயாக உள்ளது. 

மூலப்பொருள், விலை உயர்வு  காரணமாக கோவையில் உள்ள  பெரிய அளவிலான பல பம்ப்  உற்பத்தியாளர்கள் குஜராத்தில் இருந்து உதிரி பாகங்களை அதிகளவில் கொள் முதல் செய்வ தற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரு கின்றனர். இது கோவையில் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அழித்து விடும். மேலும் இந்த தொழில் நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்தால் வேலை குறைந்து நிறுவ னங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்படும்.

உள்நாட்டில் விவசாய பம்புகளுக்கான சந்தை நீண்ட காலமாக மந்தமாகவே உள்ளது. இந்த நிலையில் பம்ப் செட் உற்பத்தி செய்யும் நிறுவனங் கள் பம்ப்களுக்கான உதிரிபாகங்களை குஜராத் மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்தால் நிலைமை மேலும் மோசமாகும். எனவே  கச்சாப்பொருட் கள் நியாயமான விலையில் கிடைப்பதை ஒன்றிய அரசு  உறுதிப்படுத்த வேண்டும், வார்ப்பு இரும்பு விலை நாடு முழுவதும் சீராக இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

;