headlines

img

ஆளுநரின் அளப்பு...

அண்மையில் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக் கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்தும் கூட அவருக்குப் பதில் வேறொருவரை நியமிக்க மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது ஒன்றிய அரசு முயற்சிக்குமா எனத் தெரியவில்லை.

அண்மையில் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக் கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்தும் கூட அவருக்குப் பதில் வேறொருவரை நியமிக்க மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது ஒன்றிய அரசு முயற்சிக்குமா எனத் தெரியவில்லை.

ஆளுநர் ரவிக்கும் பதவிக்காலம் முடிந்த வர்களை மீண்டும் நீட்டிப்பது மிகவும் பிடித்த மானது என்பது சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தரின் பதவியை மீண்டும் நீடித்திருப்ப திலேயே தெரியும். அதுபோலவே ஒன்றிய பாஜக அரசு ரவிக்கும் அதிகாரப்பூர்வமாக எப்போது பதவியை நீட்டிக்கும் என்பது ஆளுநருக்கும் ஒன்றிய அரசுக்குமே வெளிச்சம்.

ஏற்கெனவே ஆளுநர் ரவி திருவள்ளுவர், வள்ளலார் எனப் பலரையும் கையில் எடுத்து அவரது அரசியலை பேசிக் கொண்டிருந்தார். இப்போது கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம் வந்து விட்டார். கம்பருக்கு புகழ் சேர்க்க ஆளுநர் ரவி போன்றோர் தேவையில்லை. 

தற்போது பிரதமர் மோடி ‘ராமராஜ்யம்’ ஆட்சியை நடத்துகிறார் என்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி பணிபுரிகிறார் என்றும் ஆளுநர் பேசியிருக்கிறார். இந்த ‘அனைத்துத் தரப்பும்’ என்பதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடி மக்கள் இல்லையா? அவர்கள் மீது புல்டோசர் ஏவுவதும்; மசூதிகளை, தேவாலயங்களை இடிப்பதும்; மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களை அழித்தொழிக்க முயற் சிப்பதும் தான் பாகுபாடின்றிப் பணிபுரிவதன் லட்ச ணமா? ஆளுநர் ரவி பிரதமரை இந்திரன், சந்தி ரன், ஏன் ராமன் என்றே நாமாவளி பாடட்டும். ஆனால் ‘பாகுபாடின்றி’ என்று கூறும் போது அவரது நா நடுங்கவில்லையா? கூசவில்லையா?

பிரதமர் மோடி பாகுபாடின்றி பணிபுரிந்தது அம் பானி, அதானிகளுக்கு மட்டுமே என்பது தானே உலகறிந்தது. இளைஞர்கள், பெண்கள், விவசாயி கள், ஏழைகளின் வளர்ச்சி பற்றி எப்போதும் சிந்தித் ததே இல்லையே. அதானி பற்றி ஹிண்டர்பர்க் அறிக்கை வந்தால் பாஜக தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களும் பதறிப்போய் அதன் மீது பாய்கி றார்களே, இதுதானே அவர்களது உண்மையான பணி. அதை மறைக்கவே ஆளுநர் ரவி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அடிப்பொடிகள் வாய் ஜாலம் காட்டுகின்றனர். ஆனால் கம்பன் அடிப்பொடி கள் இதனை கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.