games

img

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும், இல்லை என்றால் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கடந்த மே 30-ஆம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தேர்தலை நடத்த 45 நாட்கள் அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
இதனால், இந்தியா சார்பில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
 

;