games

img

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பாராட்டு விழா.... மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை மேம்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்... சு.வெங்கடேசன்....

மதுரை:
மதுரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டு கழகம் சார்பில்ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி வீரமணி, பயிற்சியாளர் கே.கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா மதுரையில் வெள்ளியன்று நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஒவ்வொரு மனிதனும் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளும் தனித் திறமை தான் விளையாட்டு. திறமையை எவ்வளவு பணம் கொடுத்தா லும் பெற முடியாது.மதுரை மாவட்டத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு  வீராங்கனை ரேவதி சென்று திரும்பியுள்ளார். ரேவதிக்கு  உந்து சக்தியாக இருந்தது பாட்டிஆரம்மாள், பயிற்சியாளர் கண்ணன்ஆகியோர். அவர்களும் பாராட்டுக்குஉரியவர்கள்.  பாட்டி ஆரம்மாள் கொடுத்த ஊக்கம் தான் அவர் டோக்கியோ ஒலிம்பிக் செல்லக் காரணமாக இருந்தது. ரேவதி மீண்டும் பயிற்சிக்குச் செல்ல உள்ளார்.  அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு மதுரைக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். 

பொருளாதாரத்தில்பின் தங்கியவர்கள்
“ஒலிம்பிக்கில் சாதித்த அனைவரும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் இல்லை. நம்முடைய விளையாட்டு வீரர்கள் பின் தங்கிய நிலையில்உள்ளனர். ரேவதிக்கு அன்பின் வெளிப்பாடாக வாலிபர் சங்கம் பரிசளித்து பெருமை சேர்க்கிறது. ரேவதி, வந்தனா கட்டாரியா போன்ற வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு போதுமான வசதிகளை ஒன்றிய அரசுசெய்துதர வேண்டும்.” என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.

பின் தங்கிய மதுரையும்... விளையாட்டு வீரர்களும்
மதுரை அனைத்து வகையிலும்மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. கல்வி, விளையாட்டுத்துறையில் நாம் மேம்படுத்தவேண் டும். குறிப்பாக மதுரை நகரின் மையப்பகுதியில் இருந்த இரண்டு உடற்பயிற்சிக் கூடங்கள் ஸ்மார்ட் சிட்டி விரிவாக்கப் பணியை ஒட்டி அகற்றப்பட்டுவிட்டன.  இவற்றில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். இளைஞர்களின் நலன் கருதி  பொருத்தமான இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் திறக்க வேண்டும். மதுரையில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரேஸ்கோர்ஸ் சீரமைக்கப்படும்
மதுரை மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தை மேம்படுத்த வேண்டும் எனக்கேட்டுள்ளனர்.  இதை சீரமைப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகளின்விளையாட்டுத்துறை அமைச்சர்களு டன் கலந்து ஆலோசித்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தோல்வியில் இருந்து மீளும் பாடம்
“ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை உத்தரகண்டில் சந்தித்தேன். அவரது  தெருவுக்குள் வாகனம் செல்ல முடியவில்லை. மிகக்குறுகலான தெரு. அவர் வாங்கிய பதக்கங்களை வைப்பதற்குக் கூட வீட்டில்  இடமில்லாமல் கீழே  வைத்திருந்தார்.ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி காலிறுதிக்குச் சென்றது மிகப்பெரிய சாதனை. அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பெண்கள் ஹாக்கி அணி, நாட்டிலுள்ள பெண்களுக்கு  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு தான் மனிதனுக்கு தோல்வியி லிருந்து மீளும் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. மாநில அளவில், தேசிய அளவில்பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து தரும்.மதுரை மக்களவை உறுப்பினர் என்ற முறையிலும் நாடாளுமன்ற விளையாட்டுத்துறை நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, போதுமான வசதிகள் கிடைக்க மாநில, ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத்தருவேன்” என்றும் சு.வெங்கடேசன் பேசினார்.

பாராட்டு நிகழ்வு
வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் பி.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வாலிபர் சங்க விளையாட்டுக் கழக மூத்ததலைவர் பி. பால்ச்சாமி, மதுரை மாவட்டதடகள சங்க  தலைவர் ஜி.கோபால கிருஷ்ணன்,  செயலாளர்  உஸ்மான் அலி,  துணைத் தலைவர்  ஆர். சுடலைமுத்து, துணைச் செயலாளர்கள்  இரா.லெனின்,  எஸ்.ராஜாராம், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா,மாவட்டச் செயலாளர் த.செல்வா, பொருளாளர் அ.பாவேல்சிந்தன், துணைச் செயலாளர் ச.சரண்,  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு)  எம்.பரமேஸ்வரன், தமிழ்நாடுஊரக வளர்ச்சித்துறை அலுவலர்  சங்க மாவட்டச் செயலாளர் அ. பாலாஜி, மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகி பி. வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்துகொண்டனர். தடகள வீராங்கனை ரேவதி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு நினைவுக் கோப்பை மற்றும் குளிர்சாதன பெட்டி ஆகியவை வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. 

;