games

img

தடகளத்தில் இரண்டாவது அதிவேக சாதனை படைத்த ஜமைக்கா வீராங்கனை தாம்சன் ஹேரா

அமெரிக்காவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் தாம்சன் ஹேரா 2வது அதிவேக சாதனையைப் படைத்துள்ளார். 

அமெரிக்காவின், ஓரேகான் மாகாணத்தில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை தாம்சன் ஹேரா பந்தய தூரத்தை 10.54 விநாடிகளில் கடந்து 2வது அதிவேக சாதனையைப் படைத்தார்.

ஏற்கனவே தாம்சன் ஹேரா டோக்கியோ ஓலிம்பிக் மகளிர் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றது குறிப்பிடக்கது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.61 வினாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து ஒலிம்பிக் சாதனையைப் படைத்துத் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம் 10.62 வினாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து, ஒலிம்பிக் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸின் சாதனையை இவர் முறியடித்தார். 

;