games

img

அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்... சென்னை திரும்பிய மாரியப்பன் நம்பிக்கை....

செங்கல்பட்டு:
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆக 24 முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது வரை இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்கேற்றுள்ளனர்.இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு  ஞாயிறன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு தமிழக பாராலிம்பிக் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக  பதக்கம் வென்றுள்ளார். கடந்தமுறை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரிலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்றுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்க பதக்கத்தை இலக்காக  வைத்து சென்றேன், மழை காரணமாக வெள்ளி பதக்கமே வெல்ல முடிந்தது என்று கூறிய அவர் 2024ல்  நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றார்.

2016ல் அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்த்தேன் கிடைக்கவில்லை, இந்த முறையாவது அரசு்வேலை வழங்க வேண்டும் மாரியப்பன் தமிழக அரசிற்கு கோரிக்கையும் வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு,வெங்கடேசன் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு குரூப்-1 அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

;