games

img

ரஷ்யாவில் சாம்பியன்ஸ் லீக் நடத்த எதிர்ப்பு

67-வது ஐரோப்பிய கால்பந்து கோப்பை (சாம்பியன்ஸ் லீக்) தொடர் ரஷ்யாவின் முக்கிய மைதானமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் வரும் மே 28-ஆம் தேதி தொடங்குகிறது.  கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யா மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் அங்கு நடத்த கூடாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமும் ரஷ்யாவில் இருந்து சாம்பியன்ஸ் லீக் தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சிகள் நடை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.