games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.... 3-வது நாளில் இந்திய அணியின் அதிர்ச்சி தோல்விகள்....

 ஹாக்கி 

இந்திய அணியை பந்தாடிய ஆஸி.,

ஆடவர் பிரிவு 2-ஆம் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 1- 7 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.    

                               *********** 

டென்னிஸ் 

சானியா - அங்கிதா ஜோடி அவுட் 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தனது முதல் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் நாடியா - லியூட்மிலா ஜோடியிடம் 1-2  என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறியது.

                               *********** 

துளிகள்...

ஜூடோ ஆடவர் 66 கிலோ பிரிவில் இந்திய வீரர் இஸ்மாயில், பிரான்ஸ் வீரர் கிலியானிடம் 3-10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார்.  

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சத்யன், ஹாங்காங் வீரர் சியு ஹாங்கிடம் 3-4 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார்.

குத்துச்சண்டை ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் கவுசிக், பிரிட்டனின் லூக்கிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.  

;