games

img

ஹாக்கி உலகில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கவுரவம் சிறந்த கோல்கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், சவிதா புனியா

ஹாக்கி உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றான கோல் கீப்பர் பிரிவு (2021-2022-ஆம் ஆண்டிற்கான) புதனன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த கோல்கீப்பர்களாக இந்தியாவின் ஸ்ரீஜேஷ் (ஆடவர் அணி), சவிதா புனியா (மகளிர் அணி) தேர்வு செய்யப் பட்டுள்ளனர். ஸ்ரீஜேஷ் மொத்தம் 39.9 புள்ளிகளுடனும், சவிதா  37.6 புள்ளிகளுடனும் தங்களது பிரிவில் முதலிடத்தில் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கடினமான பிரிவில் இந்தியாவிற்கு கவுரவம் மற்ற விளையாட்டு போட்டிகள் போல அல்லாமல் ஹாக்கி பிரிவில் கோல் கீப்பர் பிரிவு என்பது மிக மோச மானது ஆகும்.பந்து தாக்கப்படாமல் இருக்க உடலில் மாட்டப்படும் தற்காப்பு பொருளை தூக்கி நடக்கவே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் கீப்பர்கள் ஓட வேண்டும், உட்காரும் ஸ்டைலிலோ, பாய்ந்து டைவ் ஸ்டைலிலோ பந்தை தடுக்க வேண்டும். இதனால் தான் ஹாக்கி விருதுகளில் கீப்பர் விருது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கீப்பர் பிரிவுக்கான 2 விருதும் இந்தியாவிற்கு கிடைத்திருப்பது மிகவும் கவுரவமான விஷயம் ஆகும்.

;