கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ கவுஃப், ருமேனியாவின் மிஹாலேவை 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். கோகோ கவுஃப் சமீபத்தில் நிறைவு பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி வரை முன்னேறி போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்கிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை இழந்தவர். இம்முறை பட்டத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக கோகோ கவுஃப் முதல் சுற்று முதலே அதிரடியாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.