அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் யாரும் தோல்வியை சந்திக்கவில்லை. ரப்லேவ் (ரஷ்யா), ஹூபெர்ட் (போலந்து), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிரடிக்கு பெயர் பெற்ற ஜெர்மனியின் கெர்பரை 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறினார் போலந்தின் ஸ்வியா டெக். கிரீஸின் சக்கரி, அமெரிக்காவின் கீஸ், ஸ்பெயினின் படோசா ஆகியோரும் காலிறு திக்கு முன்னேறினர்.
போபண்ணா அதிர்ச்சி
இந்திய டென்னிஸ் நட்சத்திரமான ரோஹன் போபண்ணா கனடாவின் டேனிஸ் உடன் ஜோடி சேர்ந்து 4-வது சுற்று வரை முன்னேறினார். 4-வது சுற்றில் சாண்டியாகோ (மெக்ஸிகோ) - ரோஜர் (பிரான்ஸ்) ஜோடி யிடம் 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது போபண்ணா டேனிஸ் ஜோடி.