games

img

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் அரையிறுதியில் நடால்

பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது.  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரமும், ஸ்பெயின் நாட்டவருமான ரபேல் நடால், ஸ்டைலான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸை 7-6 (7-0), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  அரையிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டனின் நோர்ரி,  ஸ்பெயினின் கார்பியாவிடம் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

படோசா அபாரம் 

மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் அதிரடி வீராங்கனை படோசா ரஷ்யாவின் வெரோனிக்காவை 6-3,  6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினார்.