டென்னிஸ் உலகின் முக்கிய சர்வதேச தொடரான இந்தி யன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி நட்சத்திரமான ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் எவன்சை 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்சிபாஸ் அதிர்ச்சி
டென்னிஸ் உலகின் இளஞ்சிங்கம் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் (23) அமெரிக்காவின் ஜென்சனிடம் 6-1, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். சின்னர் (இத்தாலி), நோரி (பிரிட்டன்), கிர்ஜியஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை அந்தஸ்தில் ஸ்பெயினின் படோசா மட்டுமே 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடி வீராங்கனை பெலாரசின் அசரென்கா, எஸ்டோனியாவின் கோன்டாவெயிட் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்
இந்தியா - இங்கிலாந்து (15-வது லீக்)
இடம் : பே ஓவல், மவுண்ட் மவுங்கானுயி
நேரம் : காலை 6:30 மணி (இந்திய நேரம்)