games

img

மியாமி ஒபன் டென்னிஸ்: நவோமி ஒசாகாவை வீழ்த்தி போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் 

அமெரிக்காவின் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டின் 20 வயதான இகா ஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகாவுடன் மோதினார்.

தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா பின்னர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஸ்வியாடெக் கைப்பற்றினார்.  தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் அதிரடி காட்டிய ஸ்வியாடெக்  6-0 என்ற செட் கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றினார்.

இது தொடர்ச்சியாக அவர் பெற்ற 17வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

;