games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4ஆவது சுற்றில் நடால், ஜோகோவிச்  

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4ஆவது சுற்றுக்கு நடால், ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.  

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் சுலோவெனியாவின் அல்ஜாஸ் பெடேனை தோற்கடித்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் 4ஆவது சுற்றில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொள்கிறார்.  

பிரெஞ்சு ஓபன் மற்றொரு ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நெதர்லாந்து வீரர் ஜான்ஸ்கல்ப்பை தோற்கடித்து 17ஆவது முறையாக 4ஆவது சுற்றை எட்டினார். நடால் 4ஆவது சுற்றில் ஆஜர் அலியாசிம்மை (கனடா) எதிர்கொள்கிறார். 

;