games

img

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றம்

மெல்போர்ன், ஜன.16- ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நடக்கிறது.  இந்தத் தொடரில் கொரோனா தடுப்பூசி  போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டி யில் பங்கேற்க முடியும் என்று புதிய விதி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (34), தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், இந்தப் போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டி யிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ஆம் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில வழக்குத் தொடர்ந்த ஜோகோவிச் தனக்குச் சாதக மான தீர்ப்பைப் பெற்றார்.  ஆனால்,  ஆஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை வெள்ளிக்கிழமை மீண்டும் ரத்து செய்தார்.. இதனால் அவர்  மறுபடியும் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜோகோவிச்சின் கோரிக்கையை நிரா கரித்தது. இதன் மூலம்,  ஜோகோவிச்சால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி யில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அவர் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறு கிறார். விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பால் கடும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்ற உத்தரவை மதிப்ப தாகவும், அதிகாரிகளுக்கு உரிய ஒத்து ழைப்பு அளிப்பேன். ன்  ஓய்வெடுக்கவும், குணமடையவும் சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறேன். எனவும் ஜோகோவிச் தெரி வித்துள்ளார்.

;