games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்

சுமார் ரூ.400 கோடி பரிசுத்தொகை கொண்ட ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள  கஜகஸ்தான் வீராங்கனையான ரைபகினா வை 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் கிராண்ட்ஸ்லாம்

ஒற்றையர் பிரிவில் சபலென்காவிற்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா ரூ.17 கோடி பரி சுத்தொகையை வென்றார். 2-ஆம் இடத்தை  பெற்ற ரைபகினாவிற்கு ரூ.9 கோடி பரி சுத்தொகையும் வழங்கப்பட்டது. 

பட்டம் வெல்வாரா ஜோகோவிச்?

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்  தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம்  வென்றவரும், தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருப்பவரு மான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கிரீஸின் சிட்சிபாஸை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப் படி மதியம் 2 மணிக்கு நடை பெறுகிறது. சிட்சிபாஸ் இது வரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
 

;