games

img

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய 16 வயது தமிழக சிறுவன்

சென்னை, பிப். 21- இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான நார்வே நட்டின் கார்ல்சனை தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா ஏழு சுற்றுகளில் விளையாடி ஒரு  வெற்றி, நான்கு தோல்விகள், இரண்டு டிராக்கள் எனச் சுமாராகவே விளையாடியிருந்தார். கடைசி மூன்று ஆட்டங்களிலும் அவருக்குத் தோல்விகளே கிடைத்தன. எனினும் கார்ல்ச னுக்கு எதிராக கருப்பு நிறக் காய்களுடன் அற்புத மாக விளையாடி 39 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இது. இந்த வெற்றியினால் எட்டு சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும், 13 புள்ளிகளுடன்  கார்ல்சன் 6-ஆம் இடத்தில் உள்ளார். செஸ் உலகில் முக்கியமான நபரான கார்ல்சன்னை 16 வயது  சிறுவன் வீழ்த்தியிருப்பது செஸ் உலகில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.