games

img

நாளை தொடக்கம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொட ரின் அதிக பரிசுத்தொகை கொண்ட தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 135-வது சீசனில் தகுதி சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் திங்களன்று தொடங்குகிறது. இரட்டையர் பிரிவில் ஜூலை 29-ஆம் தேதி முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளால் ரஷ்யா,  பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த  வீரர் -வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎல் இன்றைய ஆட்டம்

கோவை - திண்டுக்கல்   
இடம் : திருநெல்வேலி 
நேரம்: இரவு 7.15