games

img

விளையாட்டு செய்திகள்

ராஜ்கோட்
பதிலடி கொடுப்பது யார்? 
இன்று 3-ஆவது டெஸ்ட் போட்டி

5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்ப தற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டி களின் முடிவில் பதிலடி வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், 3-ஆவது டெஸ்ட்  போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வியாழனன்று தொடங்குகிறது. 

இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஒருநாள்,  டி-20 போட்டிகளை போன்று இந்த டெஸ்ட் தொடரை விளை யாடி வருவதால் 3-ஆவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுதில்லி
இஷான் கிஷானை நீக்குவது நல்லது
இல்லையென்றால் மே.இ.தீவுகள் அணியின் நிலைமை உருவாகும்

இந்திய அணியின் இளம் வீரரும்,  தொடக்க அதிரடி ஆட்டக்காரரு மான இஷான் கிஷான் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க தொடருக்காக அந்நாட்டி ற்கு சென்று பாதியிலேயே திரும்பினார்.  தொடர்ந்து ஓய்வில் இருந்த இஷான் கிஷானை தேசிய அணியில் விளையாட வேண்டும் என இந்திய  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொடர்ந்து அறிவுறுத்தி யது. ஆனால் களைப்பாக இருப்ப தாக கூறி நழுவினார். 

நடப்பு சீசன் ரஞ்சிக் கோப்பை யில் ஜார்க்கண்ட் அணி (இஷான் கிஷான் விளையாடும் மாநில அணி) கடுமையாக திணறி வரும் நிலையில், வரும் 16-ஆம் தேதி நடைபெறும் ராஜஸ் தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடுமாறு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் இஷான் கிஷானை  அழைத்தது. ஆனால் இஷான் கிஷான் அழைப்பை கண்டுகொள்ளாமல், வர விருக்கும் ஐபிஎல் தொடருக்கு தயாரா கும் வகையில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியவுடன் வதோராவில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். 

ஐபிஎல் தான் முக்கியமாம்
தேசிய அணி மற்றும் மாநில  அணியை விட ஐபிஎல் தொடரையே  இஷான் கிஷான் முதன்மையாக பார்க்கிறார். இதனால் கடுப் படைந்த பிசிசிஐ இனிமேல் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிசிசிஐ-யின் இந்த புதிய விதி முறையை வீரர்கள் காயம் காரணமாக புறந்தள்ளும் வாய்ப்புள்ளதால், இஷான் கிஷானை இடைநீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனிமேல் ஐபிஎல் போட்டி யை முதன்மையாக கருதும் வீரர்களின் சுயநல முடிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கிரிக்கெட் உலகின் முக்கிய ஜாம்பவான் அணியான மேற்கு இந்தி யத் தீவுகள் அணியின் தேசிய வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல் ஆண்டு முழுவதும் உள்ளூர் போட்டி யிலேயே பொழுதை கழித்தனர்.

இத னால் முக்கிய வீரர்கள் இன்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி சுக்கு நூறாக நொறுங்கி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறாமல் இக்கட்டான நிலைக்குச் சென்றது.  தற்போது முன்னாள் கேப்டன் டேரன் சம்மியின் அதிரடி நடவடி க்கையால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடுமையான போராட்டத்துக்கு இடையே தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இது போன்ற நிலைமை இந்திய கிரிக்கெட் உலகில் ஏற்படுவதற்கு முன்பே இஷான் கிஷான் மீது நடவடிக்கை எடுப்பது நல்லது என்பது குறிப்பிடத் தக்கது.

புரோ கபடி 2024 : இன்று போட்டிகள் இல்லை

10-ஆவது சீசன் புரோ கபடி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 11-ஆவது கட்டம் லீக் ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் புதனன்று நிறைவு பெற்றது. தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டம் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் வெள்ளியன்று தொடங்குகிறது. வீரர்கள் மற்றும் போட்டி அமைப்பினர் இடம்பெயர்வு உள்ளிட்ட நிகழ்வுகளால் புரோ கபடி தொடருக்கு வியாழனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.