games

img

புரோ கபடி கோப்பை யாருக்கு? பாட்னா - தில்லி இன்று பலப்பரீட்சை

8-வது சீசன் புரோ கபடி தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதியில் பாட்னா உத்தரப்பிரதேசத்தையும், தில்லி 6-வது சீசன் சாம்பியனான பெங்களூருவையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் வெள்ளியன்று நடை பெறும் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் பாட்னா - தில்லி அணிகள் மோதுகின்றன. புரோ கபடி தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம்  (2016 (2), 2017) வென்றுள்ள பாட்னா அணி 4-வது முறையாக படம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் தில்லி அணி களமிறங்குகிறது

யாருக்கு கோப்பை?

லீக் ஆட்டங்களில் 16 வெற்றிகளை குவித்து முதலிட அந்தஸ்துடன் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பாட்னா. தில்லி 2-ஆம் இட அந்தஸ்துடன் 12 வெற்றிகளை மட்டுமே குவித்தது. லீக் ஆட்ட வெற்றிகள் ஒருபுறம் இருந்தாலும் வீரர்களின் பார்ம் பலத்தில் இரு அணிகளும் சமஅளவில் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதை திடமாக கணிக்க முடியாது.

பாட்னா

வீரர்களின் சூப்பர் பார்மால் பாட்னா அணி சற்று அசுர பலத்தில் உள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சியானே (ஈரான்) ரைடிலும், தடுப்பாட்டத்திலும் அசத்தலாக செயல்படக் கூடியவர். அதாவது முக்கிய மான ஆல்ரவுண்டர் ஆவார். பிரதீப் நார்வல்  இல்லாமல் (உத்தரப்பிரதேச அணிக்கு மாறி யவர்) சீசன் 8-இல் பாட்னா அணி முதலிடம்  பிடிப்பதற்கு சியானே தான் முக்கிய காரண மாகும். இவர் போக மோனு கோயத், செல்வ குமார் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் சூப்பர் பார்மில் இருப்பதால் பாட்னா அணி கோப்பையை வெல்ல சகல வாய்ப்புகள் உள்ளன.

தில்லி

இந்திய அணியின் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரரான நவீனை மட்டுமே தில்லி அணி நம்பி உள்ளது. மூத்த வீரர்களான மன்ஜீத் ஜில்லார், சந்தீப் நார்வல், ஜோகிந்தர் நார்வல் ஆகியோர் இருந்தாலும் முக்கியமான கட்டத்தில் சொதப்புகின்றனர். இவர்கள் அனைவரும் நவீனை போல திறம்பட செயல்பட்டால் முதல் முறையாக தில்லி அணி கோப்பையை கைப்பற்றலாம்.