games

img

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி-20 ஆட்டம்...  இந்திய அணி அசத்தல் வெற்றி...    

கான்பெரா 
இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

சுற்று பயணத்தின் முதல் கட்டமாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி-20 தொடர் இன்று தொடங்கியது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று கான்பெராவில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் களமிறங்கியது. மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்ப தொடக்க வீரர் ராகுல் (51), ஜடேஜா (44) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ரன் வேட்டைக்கு உதவினர். இந்த இரு வீரர்களின் உதவியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அசத்தியது. தொடக்க வீரர்கள் ஷார்ட் (34), பின்ச் (35) ஆகியோரின் நிதான அதிரடியால்  ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிரிபார்க்கப்ட்ட நிலையில், இந்த ஜோடியை தமிழக வீரர் நடராஜன் - சுழற்பந்துவீச்சாளர் சஹால் தொடக்க ஜோடியை பிரித்தனர். அடுத்த வந்த வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஹென்றிக்ஸ் (30) மட்டுமே ஓரளவு தாக்கு பிடித்தார். 

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தனது கன்னி சர்வதேச டி-20 போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை அணியின் வெற்றிக்கு உதவினார். 

;