games

img

விளையாட்டு... - ஐபிஎல் - 2023

இன்று விடுமுறை

16-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. குவாலிபையர், எலிமினேட்டர் 1 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், வியாழனன்று ஐபிஎல் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளியன்று எலிமினேட்டர் 2 ஆட்டம் நடைபெறுகிறது. 

ரசிகர்களின் ஆரவாரம், சிறப்பு வாணவேடிக்கையால்  அதிர்ந்த சென்னை நகரம்

குவாலிபையர் வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் - சென்னை அணி நிர்வாகம் கூட்டாக (?) சிறப்பு வாண வேடிக்கை மூலம் சென்னை ரசிகர்களு டன் இணைந்து கொண்டாடியது. 3 நிமிட சிறப்பு வாணவேடிக்கையால் சேப்பாக்கம் பகுதியில் தற்காலிக சூரியன் உதித்தது போல ஒளியால் மிளிர்ந்தது. ரசிகர்களின் ஆரவாரம், சிறப்பு வாணவேடிக்கையின் சத்தத்தால் சென்னை நகரமே குலுங்கியது.

சொந்த மண்ணில் விடைபெற்றது சென்னை

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணியும், தமிழ்நாடு மாநில, தமிழ் இன கிரிக்கெட் அணியாக கருதப்படும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி குவாலிபையரில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது என்பதால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் குவாலிபையர் ஆட்டம்தான் சொந்த மண்ணில் சென்னை அணி யின் கடைசி ஆட்டமாகும். இதனால் குவாலிபையர் ஆட்ட முடிந்த பின்பு ரசிகர்கள் அதிக கோஷங்கள், ஆரவாரத்துடன் சென்னை அணி கோப்பை வெல்ல வாழ்த்து தெரிவித்தனர்.

சின்ன பையன் சார்... எங்கயாவது போயிருப்பார்...
பதிரனாவுக்காக ஒன்று திரண்ட சென்னை வீரர்கள், ரசிகர்கள்...

குஜராத் அணி பேட்டிங்கின் பொழுது சென்னை அணியின்  இளம் வீரர் பதிரனா (20) 16-வது ஓவரை வீச வந்தார். அப்போது கள நடுவர்கள் பதிரனாவை பந்து வீச அனுமதிக்கவில்லை. காரணம் 16-வது ஓவரை வீசுவதற்கு முன் பதிரனா 12 வது ஓவரை வீசியிருந்தார். அந்த ஓவரில் அதிக உதிரிகளை (எக்ஸ்ட்ரா) கொடுத்த பதிரனா 10 பந்து களை வீசியிருந்தார். இதனால் களைப்படைந்த பதி ரனாவை ஓவர் முடிந்தவுடன் பெவிலியனுக்கு ஓய்வெ டுக்க அனுப்பி வைத்தார் கேப்டன் தோனி.மீண்டும் 16-வது ஓவரை வீச களத்திற்குள் வந்தார் பதிரனா. அதிக நேரம் ஓய்வெடுத்ததால் (8 நிமிடத்திற்கு பதில் 9 நிமிடம்) பதிரனாவை பந்துவீச அனுமதிக்கமாட்டோம் என நடுவர்கள்கூறினர். சென்னை வீரர்கள்ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசிகர்களும்,”சின்ன பையன்... எங்கயாவது போயிருப்பார்...” என்று கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு பதிரானவை போட்டி நடுவர் பந்துவீச உத்தரவிட்டார். 

 

;