games

img

டி20 உலகக் கோப்பை : குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை 

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீத் கான் நிகழ்த்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் 53 போட்டிகளில் மட்டும் விளையாடி 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷீத் கான் அதை முறியடித்துள்ளார்.

;