“சூப்பர் 12” சுற்றுக்கு இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே தகுதி
வழக்கமான டி-20 உலகக்கோப்பை போல் அல்லாமல் நடப்பு சீசன் உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டங்கள் முதலே பரபரப்பாக நகர்ந்து வருகிறது. காரணம் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய பலமான அணிகளுடன் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா ஆகிய கத்துக்குட்டி அணிகள் மிகவும் பலமாக மோதியது தான். தகுதி சுற்றின் “குரூப் ஏ” பிரிவில் சிக்கல் இல்லாமல் இலங்கை, நெதர்லாந்து அணிகள் “சூப்பர் 12” சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா வெளியேறியது. ஆனால் “குரூப் பி” பிரிவில் எந்த அணி “சூப்பர் 12” சுற்றுக்கு முன்னேறும் என்ற விவகாரம் கிளைமேக்ஸ் செய்தியாக இருந்தது. காரணம் அப்பிரிவில் இடம்பெற்றுள்ள 4 அணி கள் (மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து) ஆளுக்கொரு புள்ளியுடன் புள்ளிபட்டியலில் சரிசமமாக இருந்தது தான். இந்நிலையில், வெள்ளியன்று “குரூப் பி” பிரிவுக்கான கடைசி தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி “சூப்பர் 12” சுற்றுக்கு முன்னேறியது. (ஸ்கோர் : மே.இ.தீவுகள் - 146/5 (20), அயர்லாந்து - 150/1 (17.3)) 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்கோர் (ஸ்காட்லாந்து - 132/6 (20), ஜிம்பாப்வே 133/5 (18.3))
இன்று “சூப்பர் 12” சுற்று ஆட்டங்கள் துவக்கம்
“சூப்பர் 12” பிரிவில் மொத்தம் 12 அணிகள் உள்ளன. அதில் 6 + 6 என்ற விகிதத்தில் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. “குரூப் 1” பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசி லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் உள்ளன. “குரூப் 2” பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. இரு பிரிவு களிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் ஒருமுறை மோதும். 2 குரூப் பிரிவுகளின் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் சனியன்று முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.
இன்றைய “சூப்பர் 12” சுற்று ஆட்டங்கள்
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : சிட்னி
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான்
நேரம் : மாலை 4:30 மணி
இடம் : பெர்த்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி மற்றும் எண் வரிசைகள். ஹாட் ஸ்டார் சந்தா இருந்தால் ஸ்மார்ட்போனில் இலவசமாக காணலாம்.
பணம் என்ற மூன்றெழுத்தால் பரிதாபமாக வெளியேறிய மேற்கு இந்தியத் தீவுகள்
கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியும், அதிக முறை (2 முறை) டி-20 உலகக்கோப்பைவென்ற ஒரே அணி என்ற பெருமை கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி தகுதி சுற்றில் கடுமையாக போராடி 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் வீழ்ந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இதற்கு ஒரே ஒரு காரணம் அந்த அணியில் போது மான அளவு நட்சத்திர வீரர்கள் இல்லாதது தான். நல்ல பார்மில், மிக முக்கியமான வீரர்கள் உலகக்கோப் பையில் விளையாட தகுதியுடன் இருந்தாலும், அவர்கள் நாட்டிற்காக விளையாட விருப்பம் இல்லாமல், பணம் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு அடிமையாகி, தேசி யத்தை மறந்து உள்ளூர் டி-20 தொடர்களில் மட்டும் விளையாட சென்று விட்டார்கள். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் தேசிய அணி “நட்சத்திரம் இல்லா வானம்” போல காட்சியளித்தது. அணியில் இடம்பிடிக்க ஆர்வமாக இருந்த வீரர்கள், தேசப்பற்றுடன் இருந்த ஒன்றிரண்டு வீரர்கள், பார்ம் பிரச்சனையில் இருந்த வீரர்களை அழைத்து உலகக்கோப்பையில் போராடி மிகவும் பரிதாபமாக களமிறங்கியது. எதிர்பார்த்தது போலவே “சூப்பர் 12” சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முன்னாள் சாம்பியன், கிரிக்கெட் உலகில் அபாரமான, அதிரடி அணி என்ற பெருமைகள் அனைத்தும் நடப்பு சீசன் டி-20 உலகக்கோப்பையில் சுக்குநூறாக நொறுங்கும் அளவிற்கு மிகப்பெரிய கலங்கத்தை சந்தித்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இதற்கு எல்லாம் பொல்லார்ட் காரணம்
நாட்டிற்காக விளையாடாமல்,தேசியத்தை பற்றி கண்டுகொள்ளாமல் பணம் சம்பாதிக்கும் ஒரே ஆசையில் ஐபிஎல் போன்ற டி-20 தொடர்களில் மட்டும் விளையாடும் புதிய நடைமுறையை கிரிக்கெட் உலகில் உருவாக்கியவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நடத்திர வீரரும், ஆல்ரவுண்ட ருமான பொல்லார்ட் தான். இவரை பின்பற்றி ரசல், பிராவோ போன்ற நட்சத்திர வீரர்கள் தேசிய அணியை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளூர் டி-20 தொடர்களில் ஆதிக்கம் செலுத்த, அணி யில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் நாட்டிற்காக விளையாடாமல் நடையைக் கட்டினர். இத னால் தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகக்கோப்பையில் சோபிக்காமல் வெளியேறி யது. மேற்கு இந்தியத் தீவுகளின் இந்த நிலைமைக்கு காரணம் பொல்லார்ட் தான்.