ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொட ரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் திங்களன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இது 100-வது டெஸ்ட் ஆட்டமாகும். கிரிக்கெட் உலகின் “பாக்சிங் டே” (கிறிஸ்துமஸ் நேரத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி) டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்களில் 5 விக்கெட்டு களை இழந்து திணறியது. 100 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி கடக்குமா? என சமூக வலைதள விமர்சனங்கள் வெளி யாகிய நிலையில், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் கெய்ல் (52) - ஜான்சென் (59) ஜோடி சீரான வேகத்தில் ரன் குவித்து அணியின் ரன் ஸ்கோரை 179 ரன்களுக்கு உயர்த்தியது. இந்த ஜோடி ஆட்டமிழந்தவுடன் அடுத்த 5 விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கிரீன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத் திலேயே காவாஜாவை (1) இழந்தது. பின்னர் வார்னர் - லபுஸ்சாக்னே ஜோடி தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளித்து மெல்போர்ன் மைதானத்தில் நங்கூரம் அமைத்தது. முதல் நாள் ஆட்டநேர முடி வில் ஆஸ்திரேலியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஆட்டங்கள்'
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
(2-வது டெஸ்ட், 2-வது நாள்)
நேரம் : காலை 5:00 மணி/இடம் : மெல்போர்ன்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ்
(2-வது டெஸ்ட், 2-வது நாள்)
நேரம் : காலை 5:00 மணி/இடம் : மெல்போர்ன்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ்
இந்த ஆட்டத்தின் முதல் நாளின் 3வது சீசனில் பாகிஸ்தான் அணி 68 ஓவர்களில் 4 விக்., இழந்து 252 ரன்கள் எடுத்திருந்தது.