games

img

விளையாட்டு செய்திகள்

என்ன தான் நடக்குது டி-20 உலகக்கோப்பையில்?
இளம் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவும் சீனியர் அணிகள்
நேற்று பாகிஸ்தான்... இன்று நியூசிலாந்து, இலங்கை...

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும்  அமெரிக்கா நாடு களில் கூட்டாக நடைபெற்று வரும் நிலை யில், இந்த தொடரின் தொடக்க ஆட்டங்க ளிலேயே பலம் வாய்ந்த சீனியர் அணி கள் இளம் அணிகளிடம் அடி மேல் அடி வாங்கி வருகிறது.

அமெரிக்காவிடம்  வீழ்ந்த பாகிஸ்தான்

வியாழனன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் 2009இல் நடை பெற்ற டி-20 உலகக்கோப்பை சாம்பிய னான பாகிஸ்தான் அணி - கிரிக்கெட் பின்புலம் இல்லாத அமெரிக்காவிடம் சூப்பர் ஓவர் வரை போராடி வீழ்ந்தது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி ஒட்டு மொத்த விளையாட்டு உலகிலும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் இந்த அதிர்ச்சி தோல்வி செய்தி முழுமையாக அடங்கு வதற்குள் சனியன்று 2 முன்னணி அணி கள் இளம் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து கிரிக்கெட் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன.

வங்கதேசத்திடம் வீழ்ந்த இலங்கை

பாகிஸ்தான் அணியை போல நியூசிலாந்து, இலங்கை அணி களும் இளம் அணிகளிடம் வீழ்ந்துள் ளன. சனியன்று காலை நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் கள மிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பி ற்கு வெற்றி இலக்கை (125 ரன்கள்) எளி தாக எட்டியது. 2014இல் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பி யன் பட்டம் வென்ற இலங்கை அணி வங்க தேச அணியிடம் வீழ்ந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த நிலை யில், இரண்டாவது லீக் ஆட்டத்தில் வங்க தேச அணியிடமும் வீழ்ந்ததால் அந்த அணியின் “சூப்பர் 8” தகுதி கனவு கானல் நீரைப் போன்று காணாமல் போயுள்ளது.

நியூசிலாந்து அணியை புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான்

சனியன்று காலை நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் நியூசி லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலை யில், முதலில் களமிறங்கிய ஆப்கா னிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடி வில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக் கூடிய இலக்குடன் கள மிறங்கிய நியூசிலாந்து அணி, ஆப்கா னிஸ்தான் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணி டி-20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல வில்லை என்றாலும், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் உலக சாம்பி யன்ஷிப் தொடர்களில் பட்டம் வென்று ள்ள அணியாகும். கிரிக்கெட்டில் வலு வான அடித்தளத்தை கொண்ட நியூ சிலாந்து அணி இரண்டாம் தர அணி யான ஆப்கானிஸ்தானிடம் மிக மோச மான அளவில் படுதோல்வியை சந்தித்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தும்..

வெள்ளியன்று இரவு நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற இளம் அணி யான அயர்லாந்து அணி கனடா அணி யிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.  கனடா அணியை விட அயர்லாந்து அணிக்கு கிரிக்கெட்டில் போதுமான அளவு அனுபவம் உள்ளது. உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து உள்ளிட்ட சீனியர் அணிகளை வென்ற அனுபவம் கொண்ட அயர்லாந்து அணியை, இளம் கனடா அணி சாய்த்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. சீனியர்களின் அடுத்தடுத்த தோல்விக்கு மைதானம் காரணமா? வீரர்களின் சொதப்பலான ஆட்டம் காரணமா? இல்லை இளம் அணிகளின் உத்வேகம் காரணமா? என பொதுவான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் சாம்பியன் அணிகள் உள்ளிட்ட சீனியர்கள் அணிகள் இளம் அணிகளிடம் தோல்வியை தழுவி வருவது விளையாட்டு சர்ச்சைக்குரிய செய்தியாக வட்டமடித்து வருகிறது.