games

img

விளையாட்டு செய்திகள்

துதில்லி
கோப்பை வென்று சாதித்த மகளிர் ஆர்சிபி
இந்திய கிரிக்கெட் உலகமே கொண்டாடும் அதிசயம்

ஆடவருக்கு ஐபிஎல் என்ற பெயரில் டி-20 லீக் நடத்தப்படுவது போல, மகளிருக்கும் கடந்த ஆண்டு முதல் டபிள்யு.பி.எல்  (WPL - Women’s Premier League) என்ற பெயரில் டி-20 தொடர் நடத்தப் பட்டு வருகிறது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. 

தில்லி, பெங்களூரு (ஆர்சிபி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), மும்பை, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக்  ஆட்டங்களின் முடிவில் மும்பை, பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கும், புள்ளிப்பட்டியலில் முத லிடத்தை பிடித்ததால் தில்லி அணிகள் இறுதிக்கும் முன்னேறின. எலிமினேட் டர் சுற்றில் மும்பையை வீழ்த்தி பெங் களூரு அணி இறுதிக்கு முன்னேறிய நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெங்களூரு - தில்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை ருசித்து முதல்முறையாக சாம்பியன் பெற்று வரலாறு படைத்தது.

கொண்டாட்டம்
ஆடவர் ஐபிஎல் பிரிவில் முக்கிய நட்சத்திர அணியாக உள்ள விராட் கோலியின் பெங்களூரு அணி முதல் இரண்டு தொடர்களை தவிர மற்ற 14  தொடர்களில் மிக அருமையாக விளை யாடினாலும், இறுதிக்கட்ட சொதப்பல் களால் கோப்பையை கையில் ஏந்து வது கானல் நீராகவே உள்ளது. 

கோப்பைக்காக பெங்களூரு வீரர்களின் போராட்டம், அந்த அணியின்  ரசிகர்களின் கண்ணீர் கலந்த நிகழ்வு களால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஐபி எல் அணி கோப்பையை வெல்லா விட்டாலும் பரவாயில்லை, பெங்களூரு அணி கோப்பையை வெல்லட்டும் என்ற பரிதாபமான ஆதரவு மனநிலை யை அளிக்கத் தொடங்கிவிட்டனர். 

இத்தகைய சூழலில் மகளிர் டபிள்யு.பி.எல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசி கர்கள் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவின் பெரும்பாலான இடங் களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட் டத்தை அரங்கேற்றியுள்ளனர். இது போக சமூகவலைத்தளங்களில் ரசிகர் களின் வாழ்த்து மழை, நெட்டிசன்களின் மீம்ஸ் போன்றவற்றால் மகளிர் ஆர்சிபி அணி டாப் டிரெண்டிங்கில் உள்ளது. உண்மையில் டபிள்யு.பி.எல் தொடர் இந்திய கிரிக்கெட் உல கில் பெரியளவு பிரபலமடையாத நிலை யில், பெங்களூரு அணியின் வெற்றி யின் மூலம் டபிள்யு.பி.எல் தொடர் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள் ளது. பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றால் டபிள்யு.பி.எல் தொடர் அதே நிலையில் தான் இருந்திருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.

கலிபோர்னியா
இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் : அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்

அமெரிக்காவின் கலிபோர்னி யா நகரில் நடைபெற்று வந்த இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் ஞாயிறன்று நிறைவு பெற்றது. 

இளம் வீரர் - வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தால் பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் ஒற்றை
யர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில்  9-ஆவது இடத்தில் உள்ள கிரீஸின் சக்கரியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி னார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

;