டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ஆல்ரவுண்டர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம், ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹோல்டர் 2 ஆம் இடத்திலும், அஸ்வின் 3 ஆம் இடத்திலும் உள்ளனர். ஜடேஜா 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெ.1 ஆல்ரவுடராக இருந்த நிலையில், மீண்டும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.