games

img

ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின் மித்தாலி ராஜ் பெயர்கள் பரிந்துரை

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின் மித்தாலி ராஜ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது 
இந்நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினையும், மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜையும் பரிந்துரைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 
அதேபோல் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு, கே.எல். ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, ஷிகர் தவான் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

;