தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைதொடர்ந்து தென்ஆப்பிரிக்க தோல்விக்குப்பின் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டி காக் தனது ஓய்வை திடீரென அறிவித்தார்.
29 வயதாகும் குயின்டன் டி காக் 2012 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தென்ஆப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 5,355 ரன்கள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 1,827 ரன்களும் குவித்துள்ளார். அதனைதொடர்ந்து டெஸ்ட் போட்டியில் குயின்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் தனது வளர்ந்து வரும் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதைக் காரணம் காட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவது இத்துடன் முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பங்கேற்பேன். அனைவரையும் ஒருநாள், டி20 தொடர்களில் சந்திக்கிறேன் என்றார்.