games

img

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்...  இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி....  

கான்பெரா 
ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் கான்பெராவில் இன்று (புதன்) நடைபெற்றது.  

டாஸ் வென்ற இந்திய அணி தொடக்கத்திலியே மிதமாக ரன் குவித்தது. தொடக்க வீரர் சப்மன் கில் (33), கேப்டன் விராட் கோலி (63) மட்டுமே ஓரளவு கைகொடுக்க தவான், ஷெரயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் 20 ரன்னுக்குள் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியின் விக்கெட் சரிவால் 200 ரன்னை கூட தொடாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா - ஜடேஜா  ஆகியோர் பதற்றமான நிலையிலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எவ்வித சலனமில்லமால் பிழிந்தெடுத்தனர். இவர்களின் மிரட்டலான அதிரடியால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சின் வேகத்தை அதிகரித்தனர். எனினும் அதற்கு ஹர்திக் - ஜடேஜா ஜோடி மிரளவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி 150 ரன்கள் குவித்து அதகளப்படுத்தியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஹர்திக் 76 பந்துகளில் 92 ரன்களும்,  ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வலுவான ரன் எண்ணிக்கைக்கு உதவினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.         

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே அதிர்ச்சியை பெற்றது. இந்திய அணியில் புதிதாக இடம்பிடித்த தமிழக சிங்கம் நடராஜன் தொடக்க வீரர் லபுஸ்சாக்னேவை 7 ரன்னில் வெளியேற்றினார். அடுத்த சில நிமிடங்களில் தாக்குர் ஸ்மித்தை (7) வெளியேற்ற ஆஸ்திரேலிய அணி தங்ககளது பேட்டிங் ஸ்டைலை மாற்றியது. அதாவது மிதமான வேகத்தில் ரன் குவித்தது. கேப்டன் பின்ச் (75), மேக்ஸ்வெல் (59) ஆகியோர் ஓரளவு நிதானமாக ரன் குவித்தாலும் இவர்களுக்கு அடுத்து வந்தவர்கள் இந்திய அணியின் டெத் ஓவர்களை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடலிருந்து விடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.    

;