இறுதிக்கு முன்னேறுவது யார்?
நியூசிலாந்து - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
8-வது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. முதல் அரை யிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
யாருக்கு வாய்ப்பு?
இரு அணிகளும் சரிசம பலத்தில் இருந்தாலும், பார்ம் பிரச்சனை மிகப்பெரிய விஷயமாக உள்ளது. பார்ம் பிரச்சனை ஒவ்வொரு ஆட்டத்திலும் மாறுபட்டு பிரதி பலிக்கும் என்பதால் யாருக்கு வெற்றி என்று உறுதியாக கருத்துக் கூற முடியாது. ஆனால் சொந்த மண் (ஆஸ்தி ரேலிய கண்டத்தில் இருப்பதால்) மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் நியூசிலாந்து அணிக்க ஓரளவு வாய்ப்புள்ளது.
அதிக சிக்ஸர்கள்: தென் ஆப்பிரிக்கா வீரர் முதலிடம்
சூப்பர் 12 சுற்றில் மட்டும் அதிக சிக்ஸர்கள் விளா சிய வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரூசோவ் முதலிடத்தில் உள்ளார். ரூசோவ் நடப்பு சீச னில் சதமடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூசோவ் (தென் ஆப்பிரிக்கா) - 9 மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) - 9 கிளன் பிளிப்ஸ் (நியூசிலாந்து) - 8 கே.எல்.ராகுல் (இந்தியா) - 8 சூர்யகுமார் (இந்தியா) - 8 விராட் கோலி (இந்தியா) - 7 தகுதி சுற்று சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த வர்கள் பட்டியலில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா (11 சிக்ஸ்) முதலிடத்திலும், இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ் (10 சிக்ஸ்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
மழை வருமா?
புதனன்று வானிலைப்படி சிட்னி நகரில் மழை பெய்வ தற்கான வாய்ப்பில்லை. மந்தமான அதாவது 22 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெயில் அடிக்க வாய்ப்புள்ளது.
இனி மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால்?
காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் டி-20 உலகக்கோப்பை மழையால் மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தற்போது அரை யிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், இனி மழை யால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அதிரடி முடிவு தான் எடுக்கப் படும். அரையிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் சூப்பர் 12 சுற்றில் அவரவர் குரூப் பிரிவில் முதலிடம் வகித்த இந்தி யாவும், நியூசிலாந்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். இறுதிச்சுற்றிலும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் போனாலும், கூடுதல் நாளைப் பயன்படுத்தியும் ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியாவும், நியூசிலாந்தும் வெற்றியா ளர்களாக அறிவிக்கப்பட்டு, உலகக் கோப்பை பகிர்ந்த ளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.