games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து, அமெரிக்கா

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் 9-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற “குரூப் இ” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் வியட்நாம் - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை புரட்டியெடுத்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், ஒரு வெற்றி கூட பெறாத வியட்நாம் அணி தொடரில் இருந்து வெளியேறியது.  இதே பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - அமெரிக்கா அணிகள் மோதின. இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியதால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் நிறைவடைந்தது. புள்ளிகளின் அடிப்படையில் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய, போர்ச்சுக்கல் அணி வெளியேறியது. 

இன்றைய ஆட்டங்கள்

அர்ஜெண்டினா - ஸ்வீடன் 
நேரம் : மதியம் 12:30 மணி
தென் ஆப்பிரிக்கா - இத்தாலி
நேரம் : மதியம் 12:30 மணி
பனாமா - பிரான்ஸ்
நேரம் : மாலை 3:30 மணி
ஜமைக்கா - பிரேசில்
நேரம் : மாலை 3:30 மணி

வெற்றியுடன் விடைபெற்றார் ஸ்விங் ஜாம்பவான் பிராட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், நட்சத்திர பந்துவீச்சாளருமான ஸ்டூவர்ட் பிராட் (37) ஆஷஸ் தொடரோடு சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளர்களில் ஒருவ ரான ஸ்டூவர்ட் பிராட், இங்கிலாந்து நாட்டி ற்காக 17 ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஒருநாள், டி-20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்டுகளை கைப்பற்றி 3,662 ரன்களை குவித்த பிராட், இதுபோக 20 முறை 5 விக்கெட்டுகளையும் (ஒரு இன்னிங்ஸ்), 3 முறை 10 விக்கெட்டுகளையும் (2 இன்னிங்ஸ்) கைப்பற்றியுள்ளார். 121 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 178 விக் கெட்டுகளையும், 56 டி-20 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  ஆல்ரவுண்டர் அந்தஸ்தில் இல்லை என்றாலும், இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் மூலம் அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றுள்ளார். இத்தகைய சிறப்பு அம்சங்களுடன் கிரிக்கெட் உலகை மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடரின்  கடைசி டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் உலகில் இருந்து விடைபெற்றார்.

பேஸ்ட் ஆப்... பிராட்...

1.     டெஸ்ட் போட்டியில் சளைக்காமல் ஒரே நாளில்
50 ஓவர் கூட வீசும் உடல், மனதிறன் கொண்டவர்.
2.     அதிகம் உணர்ச்சிவசப்படமாட்டார். ஆனால் கோபம் வந்தால் சண்டைக்கு முதல் ஆளாக இருப்பார்.
3.     ஆஸ்திரேலிய அணியைக் கண்டால் இவருக்கு பிடிக்காது.
4.     ஸ்விங் வகை பந்துவீச்சை 140 கிமீ அதிகமான வேகத்தில் வீசும் திறன் உடையவர்
5.     டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்க்கு இணையாக பேட்டிங் செய்வார்.
6.     மந்தமான செயல்திறன் கொண்ட வீரராக இருந்தாலும், ஒருநாள், டி-20 போட்டிகளில் சிறப்பாக
 

விளையாடக் கூடியவர்.
 

7.     ரன்களை வாரி வழங்கினாலும் பார்ம் பிரச்சனையில் சிக்காமல் அடுத்த ஓவரிலேயே பார்முடன் பந்துவீசும் சிறப்பு திறன் கொண்டவர்.
8.     நாட்டிற்கு தவிர்த்து வேறு உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடமாட்டார்.
9.     தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நன்றாக விளையாடுவார்.
10.     கடைசியாக ஒன்று...  சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 பந்துக்கு 6 சிக்ஸர் விட்டுக்கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சிறப்பும் பிராட்டிடம் தான் உள்ளது. 6 சிக்ஸர் அடித்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆவார்.

தனது வாழ்நாளின் கடைசி பந்தில் விக்கெட், கடைசி பேட்டிங்கில் சிக்ஸர், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி என மூன்று சிறப்புகளுடன் விடை பெற்றவர் பிராட் என்பது குறிப்பிடத்தக்கது.