மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் முக்கிய வீரர்கள் விலகல்
களிமண் தரையில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடரான மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 11 முறை சாம்பியனான ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் வீரருமான அல்காரஸ் மற்றும் கனடாவின் இளம் வீரர் பெலிக்ஸ் ஆகியோரும் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
விளையாட்டிலும் கல்லா கட்டும் அம்பானி ரூ.682 கோடி சொத்துடன் மும்பை முதலிடம்
ஐபிஎல் - 2023
ஐபிஎல் தொடரில் தற்பொழுது விளையாடி வரும் 10 அணிகளின் நிகர சொத்துமதிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அம்பானியின் மும்பை அணிக்கு ஐபிஎல்-லில் அதிக சொத்து கொண்ட அணியாக முதலிடத்தை பிடித்துள்ளது. மும்பை அணிக்கு ரூ.682 கோடி சொத்து உள்ளது. மும்பைக்கு அடுத்து கொல்கத்தா அணி ரூ.629 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்திலும் (ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் - மேத்தா குழுமம்), ரூ.603 கோடி சொத்துக்களுடன் சென்னை அணிக்கு (இந்தியா சிமெண்ட்ஸ்) அணி 3-வது இடத்தில் உள்ளது.
மற்ற அணிகளின் சொத்து மதிப்பு
4. பெங்களூரு (யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்) - ரூ.557 கோடி
5. தில்லி (ஜிஎம்ஆர் குரூப் - ஜேஎஸ்டபிள்யூ) - ரூ.511 கோடி
6. ராஜஸ்தான் (அமிஷா ஹத்திராமணி உட்பட 5 பேர் கூட்டணியில்) - ரூ.502 கோடி
7. ஹைதராபாத் (சன் குழுமம்) - ரூ. 400 கோடி
8. குஜராத் (சிவிசி கேபிட்டல்) - ரூ. 388 கோடி
9. பஞ்சாப் (நடிகை ப்ரீத்தி ஜிந்தா உட்பட 4 பேர் கூட்டணியில்) - ரூ.388 கோடி
10. லக்னோ (ஆர்பிஎஸ்ஜி குழுமம்) - ரூ.260 கோடி
தமிழ்நாட்டிற்கு 2 அணிகள்
ஐபிஎல் தொடரில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 அணிகளை வைத்துள்ளனர். தமிழ்நாடு அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனருமான என்.சீனிவாசன் உள்ளார். தெலுங்கானா - ஆந்திரா மாநிலங்களின் கூட்டு அணியாக உள்ள சன் ரைசர்ஸ் ஹைத ராபாத் அணியின் உரிமையாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடக குழும நிறுவனமான சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் உள்ளார். இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் என்பதால் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தவிர்த்து ஹைதராபாத் அணிக்கும் தனிப்பட்ட ஆதரவு தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்
கிரிக்கெட் விளையாட்டில் ரசிகர்களின் கேலரிக்கு நடுவே பெரிய எல்இடி தொலைக்காட்சி அமைப்பில் ஸ்கோர் கார்டு, ரிப்ளே, 3-வது நடுவர் ஆய்வு, வீரர்களின் சாதனைகள் தொகுப்பு என அனைத்தும் ஒளிபரப்பப்படும். கடந்த 15 ஐபிஎல்ச சீசனிலும் இதே முறை பின்பற்றப்படும் நிலையில், 16-வது சீசனில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில், எல்இடி தொலைக்காட்சி அமைப்பில் ஸ்கோர் கார்டு கால் பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது. முக்கால்வாசி பகுதி விளம்பர பகுதியாக பிரிக்கப் பட்டுள்ளது. மேலும் விளையாட்டு தொடர்பான தனிப்பட்ட நிகழ்வை அதிகம் ஒளிபரப்பு செய்யப்படாமல் விளம்பரமே அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா- பெங்களூரு
இடம்: ஈடன் கார்டன், கொல்கத்தா
நேரம் : இரவு 7:30
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)